பொருளாதார வளர்ச்சி 7.8% : போருக்கு இடையே சாதித்த இந்தியா : கணிப்புகளை பொய்த்து வளர்ச்சி, பிரதமர் மோடி பெருமிதம்..!

ஈரான் போருக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சியை எட்டியது பற்றி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.
Prime Minister Modi expressed pride Indian economy achieving 7.8% growth despite war involving Iran
Prime Minister Modi expressed pride Indian economy achieving 7.8% growth despite war involving Irangoogle
1 min read

India's economy grew by 7.8% in the April-June quarter of 2026, beating most expert predictions.

முதல் காலாண்டு - இந்தியாவின் வளர்ச்சி

2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டது.

2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26ம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.75.46 லட்சம் கோடியாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சி 7.8%

இதன் மூலம் 7.8 சதவீத வளர்ச்சி பதிவாகி உள்ளதாக ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டின் 8.6 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட குறைந்தது என்றாலும், ரிசர்வ் வங்கியின் 7 சதவீத கணிப்பை தாண்டி உள்ளது.

ஈரான் போர் உள்ளிட்ட வெளிப்புற தாக்கங்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி வேகம் நிலைத்திருப்பதை காட்டுவதாகவும் அரசு கூறி உள்ளது.

சாதித்த இந்தியா - பிரதமர் பெருமிதம்

இந்த வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி மிகப்பெரிய சாதனை. உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் இருந்தன.

ஆனாலும், இந்தியாவின் இந்த வளர்ச்சியை நமது மக்களின் கூட்டு வலிமை உறுதி செய்து இருக்கிறது. கணிப்புகள் பொய்யாயின, இந்தியா மீண்டும் செழித்தது’’ எனக் கூறி உள்ளார்.

நிர்மலா சீதாராமன் பாராட்டு

‘‘என்டிஏ அரசு தேஜ கூட்டணி அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களும், பொருளாதாரத்தின் திறமையான நிர்வாகமும் தற்போது நல்ல பலன்களைத் தருகின்றன’’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in