1,000 ஆண்டு வரலாறு கூறும் ஆனைமங்கலம் செப்பேடுகள் : சோழர்களின் மதநல்லிணக்கம் : இந்தியா கொண்டு வரும் பிரதமர் மோடி!

சோழ மன்னர்களின் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து இந்தியா கொண்டு வந்திருக்கிறார் பிரதமர் மோடி.
Prime Minister Modi has brought back to India from the Netherlands the Anai Mangalam copper plates
Prime Minister Modi has brought back to India from the Netherlands the Anai Mangalam copper platesgoogle
3 min read

ஆனைமங்கலம் செப்பேடுகள்

Prime Minister Modi has brought back to India from the Netherlands the Anai Mangalam copper plates, which reflect the religious harmony of the Chola kings : சோழர்களின் பெருமையை உலகிற்கே பறைசாற்றும் ஆனைமங்கலம் செப்பேடுகள், 300 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கின்றன. நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருந்த இந்த செப்பேடுகளை இந்தியா கொண்டு வர நீண்ட காலமாக இருந்த கோரிக்கை, பிரதமர் மோடி மூலமாக நிறைவேறி இருக்கிறது.

இந்த செப்பேடுகளை கங்கைகொண்ட சோழபுரம் அல்லது நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்காக காட்சிபடுத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

சோழர்களின் பொற்கால ஆட்சி

தமிழகத்தை ஆட்சி புரிந்த மூவேந்தர்களில் சோழர்களின் காலம் என்பது பொற்காலமாக கருதப்படுகிறது. ஏனென்றால், இன்று உலகெங்கும் நடைபெறும் தேர்தலுக்கு முன்னோடியாக குடவோலை முறையை கொண்டு வந்தது சோழர்கள் தான்.

விண்ணை முட்டும் தஞ்சை பெரியகோவில், உலகமே வியக்கும் கல்லணை, காவிரி கரையோரம் ஆயிரக் கணக்கான சிவன் கோவில். இயந்திரங்களே இல்லாத காலத்தில் வலிமையான மிகப்பெரிய கடற்படை என சோழர்களின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

400 ஆண்டுகள் சோழர் ஆட்சி

சுமார் 400 ஆண்டுகள் 16 அரசர்கள் சோழ தேசத்தை ஆட்சி புரிந்தார்கள். அவர்களில் 11ம் நூற்றாண்டில் அரியணையில் இருந்த ராஜராஜ சோழன், அவரது மகன் ராஜேந்திர சோழன் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் காலத்தில் வந்ததது தான், ஆனைமங்கலம் செப்பேடுகள்.

இந்த செப்பேடுகளின் சிறப்பு என்ன? அவை எதற்காக இன்றுவரை பேசப்படுகின்றன. சோழ தேசத்தில் இருந்த இவை நெதர்லாந்து சென்றது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

ராஜராஜனின் மதநல்லிணக்கம்

மாமன்னன் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய பிறகு, மத நல்லிணக்கத்தை முழுமையாக பின்பற்றி வந்தார். இவர் சைவ சமயத்தை சேர்ந்தவரா இருந்தாலும், வைணவம், பௌத்தம் சோழ மண்டலத்தில் தழைப்பதை ஒருபோதும் தடுக்கவில்லை.

புத்த விகாரத்திற்கு கிராமம் தானம்

தனது 21வது ஆட்சி ஆண்டில் அதாவது கிபி 1005ல், நாகப்​பட்​டினத்​தில் ’விஜய கிடாரத்து அரசன் மாறவிஜயோத்​துங்க வர்​ம​னால் ‘சூளாமணி வர்ம விகாரம்’ என்ற புத்த விகாரம் கட்டித தரப்பட்டது.

இதை பராமக்க 97 வேலி பரப்பு கொண்ட ஆனைமங்​கலம் கிராமத்தை ராஜ​ராஜ சோழன் தானமாக வழங்கி தனது மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆவணமாக செப்புப் பட்டயம்

நிலம் கொடுக்கப்பட்டாலும், அதற்கான பட்டயம் எதுவும் வழங்கப்படவில்லை. 1014ம் ஆண்டு ராஜராஜ சோழன் மறையும் வரை நல தானம் வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன், புத்த விகாரத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை, எழுத்​துப் ​பூர்​வ​மாக பட்​ட​யம் வெட்டி உறுதி செய்​தி கொடுத்தார்.

21 செப்பேடுகள், 30 கிலோ எடை

அதுதான் ஆனைமங்கலம் செப்பேடுகள் என்று இன்று வரை தமிழர்களால் போற்றப்பட்டு வருகிறது. 30 கிலோ எடை கொண்ட 21 செப்​பேடு​கள், ஒரு வெண்கல வளை​யத்​தால் பிணைக்​கப்​பட்​டுள்​ளன.

வளை​யத்​தில் சோழ அரச முத்​திரை உள்​ளது. 5 ஏடு​கள் வடமொழி​யிலும், 16 ஏடு​கள் தமிழிலும் எழுதப்பட்டு இருக்கின்றன.

சோழர்களின் சமைய பொறை

பின்னர் குலோத்​துங்க சோழன் உறுதி செய்த 3 சிறிய ஏடு​களும் இதில் இணைக்​கப்​பட்​டுள்​ளன. சைவ சமயத்தை சார்ந்த ராஜ​ராஜ சோழன், ஒரு புத்த விகாரத்​துக்கு ஊரையே தானம் செய்​தது தமிழ் மன்​னர்​களின் சமய பொறையை வெளிக்காட்​டு​கிறது.

சோழ நிர்வாகம், பறைசாற்றும் செப்பேடுகள்

சோழர் காலத்து நிர்​வாக சொல்​லாடல், நில அளவை முறை, சட்​டப்​பூர்வ ஆவண மரபை செப்பேட்டில் வெட்டப்பட்டு இருக்கின்றன.

11ம் நூற்றாண்டிலேயே சோழர்கள் உலக அளவில் வர்த்தகம் செய்தது, போத்த- சைவ மதத்தினரிடேயே இருந்த நல்​லிணக்​கம், சோழர்​களின் நிர்​வாகத் திறன், கடல் ​கடந்த ராஜதந்​திர உறவுக்கு இது சான்​றாக இருக்கிறது.

சோழர் அரசர்களின் பட்​டியல், அதி​காரி​களின் பட்​டியல், வென்ற நாடு​கள் பற்றிய குறிப்​புகளும்ம் செப்பேடுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன.

நெதர்லாந்து கொண்டு சென்ற வணிகர்கள்

18ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த டச்சு வணிகர்கள் மூலம் ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

ஃப்​ளோரன்​சி​யஸ் கேம்​பர் என்​பவ​ர் நாகை பௌத்த விகாரத்தில் இருந்த செப்​பேடு​களை எடுத்து சென்றார். ஹமேக்​கர் என்பவரின் குடும்​பதினரால் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்த செப்பேடுகள், 1862-ல் லெய்​டன் பல்​கலைக்​கழக அருங்​காட்​சி​யத்​துக்கு நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டன.

நெதர்லாந்து அருங்காட்சியம்

அன்றுமுதல் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த செப்பேடுகளை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று தமிழ் ஆர்​வலர்​கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

செப்பேடு ஆய்வாளர் ஹேமந்த்

வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகளை (Leiden Copper Plates) தாயகத்திற்கு மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் முக முக்கிய பங்காற்றியவர் செப்பேடு ஆய்வாளர் ஹேமந்த். 2023ம் ஆண்டு நெதர்லாந்து சென்ற அவர், செப்பேடுகளை நேரடியாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தினார். செப்பேடுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் இவர்தான்.

தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும், அது தமிழர்களின் பொக்கிஷம் என்பதில் உறுதியாக இருந்த ஹேமந்த், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சட்ட நிபுணர்களோடு இணைந்து செயல்பட்டு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டார்.

மத்திய அரசு நடவடிக்கை

இதன் பலனாக ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்து செப்பேடுகளை, இந்தியாவிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசு முன்வந்தது. வெளிநாடுகளில் இருக்கும் எந்த விதமான பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம்.

அந்ந வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆனைமங்கலம் செப்பேடுகளை இந்தியா கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு

இதற்கான பலன், பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது கைகூடி வந்திருக்கிறது. ஆனைமங்கலம் செப்பேடுகளை பிரதமரிடம் மோடியிடம் நெதர்லாந்து அரசு முறைப்படி ஒப்படைத்தது.

தமிழகம் வரும் செப்பேடுகள்

இவற்றை கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்கு நிரந்​தரமாகக் காட்​சிப்​படுத்த வேண்​டும் என கங்​கை​கொண்ட சோழபுரம் மேம்​பாட்​டுக்​குழும தலை​வர் ஆர்​.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆனைமங்​கலம் செப்​பேடு​களை நாகப்​பட்​டினத்​தில் பாது​காப்​புடன் காட்​சிப்படுத்த மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

சோழர் ஆட்சியின் காலக்கண்ணாடி

ஆயிரம் ஆண்​டு​களுக்கு முந்​தைய தமிழர்களின் சிறப்புகளை பேசும் காலக்​கண்ணாடி​யாக ஆனைமங்கலம் செப்பேடுகள் உள்ளன. இவை தமிழகம் வருவது நம் அனைவருக்கும் கிடைக்கும் பெருமை என்பதை ஐயமில்லை.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in