பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பிரதமர் பயணம் : ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு, அதிபர் டிரம்ப் உடன் சந்திப்பு...!

இருதரப்பு உறவு, பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Prime Minister Modi has embarked on an official visit to France and Slovakia
Prime Minister Modi has embarked on an official visit to France and Slovakia google
1 min read

ஐரோப்பிய நாடுகளின் இந்தியா நீண்ட காலமாக சிறப்பான நல்லுறவை பேணி வருகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர் முன்னெடுப்புகள் எடுத்து வருகிறது.

மோடி பிரான்ஸ் பயணம்

இதன் ஒருபகுதியாக பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை பிரான்ஸ் புறப்பட்ட அவர், நைஸ் நகரை சென்றடைகிறார்.

இம்மானுவல் மேக்ரானுடன் சந்திப்பு

அங்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விரிவான ஆய்வு நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான கண்டுபிடிப்பு ஆண்டைக் கொண்டாடும் விதமாக, ஜூன் 14 ஆம் தேதி பாரத் இன்னோவேட்ஸ் (Bharat Innovates) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

பாரத் இன்னோவேட்ஸ்

தனித்துவமான இந்தத்தளம் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சர்வதேச முதலீட்டாளர்களுடன் நேரடியாக இணைப்பதுடன், நாட்டின் உயர்கல்வித் துறையில் இருந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலகளாவிய சந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.

ஸ்லோவாக்கியா செல்லும் மோடி

பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்து ஸ்லோவாக்கியா செல்கிறார் பிரதமர் மோடி. 1993ம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை.

தலைநகர் பிராதிஸ்லாவாவில் ஸ்லோவாக்கிய அதிபர் பெல்லெக்ரினி மற்றும் பிரதமர் ஃபிகோ ஆகியோரைச் சந்தித்துப் பேசும் பிரதமர், அந்நாட்டின் முன்னணி வணிகத் தலைவர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு

இதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெறும் 52வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்தியா தொடர்ந்து 8வது முறையாக இம்மாநாட்டிற்கு அழைக்கப்படுவது உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி

இம்மாநாட்டில் வளரும் நாடுகளின் (Global South) குரலாக இந்தியா ஒலிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டில் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி.

இந்தியா மீது அமெரிக்கா வர்த்தக தடைகளை விதித்த பிறகு, இருதலைவர்களும் இப்போதுதான் சந்திக்க உள்ளனர்.

வர்த்தக ஒப்பந்தங்கள், விசா கட்டுப்பாடுகள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in