”2036ல் இந்தியாவில் ஒலிம்பிக்” : 140 கோடி மக்களின் கனவு : சாதிக்க போகும் இந்தியா, பிரதமர் மோடி உறுதி...!

2036ம் ஆண்டு இந்தியாவில ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் அப்படின்னு பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Prime Minister Modi has firmly stated that the Olympic Games will be held in India in 2036.
Prime Minister Modi has firmly stated that the Olympic Games will be held in India in 2036source:thamizhalai,ai generated
1 min read

ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா

உலக அளவில் நடக்கிற மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடத்தப்படுது. பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கிற நாடுகளால மட்டும் ஒலிம்பிக்கை நடத்த முடியும்.

காரணம் இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கு. இந்தியா போன்ற வளரும் நாடுகள் காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள நடத்துகின்றன.

விளையாட்டுத் துறை - மத்திய அரசு முன்னெடுப்பு

விளையாட்டுத்துறை வளர்ச்சியில அதிக அக்கறை செலுத்தி வர்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவிலும் ஒலிம்பிக்கை போட்டியை நடத்த ஆர்வம் காட்டி வருது. ஆசிய நாடுகளில சீனா மட்டுமே ஒலிம்பிக் போட்டிய நடத்தி இருக்கு.

ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் குவிப்பு

சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில பதக்கங்களை வாங்கி நாட்டிற்கு பெருமை தேடி தந்த வீரர், வீராங்கனைங்க பிரதமர் மோடிய சந்திச்சாங்க.

வீரர்களுடன் மோடி சந்திப்பு

வீரர்​கள் கையொப்​பமிட்ட ஜெர்​சிகள் உள்​ளிட்ட நினை​வுப் பரிசுகள் பிரதமருக்கு வழங்​கப்​பட்​டன. மேலும், வில்​வித்​தை​யில் அசத்​திவரும் 17 வயதான கும்​கும் மோஹோட், தான் பயன்​படுத்​தும் வில்​லை​ மோடிக்கு நினை​வுப் பரி​சாக கொடுத்தாரு.

வீரர்கள் மத்தியில பேசிய பிரதமர், 140 கோடி இந்​தி​யர்​களும் பெருமை கொள்றா மாதிரி சாதிச்ச வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியா மீது அதீத நம்பிக்கை

சர்​வ​தேச விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதில நம்பகத்தன்மை மிக்க, விருந்தினர்களை சிறப்பாக நடத்துற நாடா இந்தியா இருக்கு.

2036ல் இந்தியாவில் ஒலிம்பிக்

ஒலிம்பிக் போட்டிகள நமது நாட்டுல நடத்தனும் அப்படிங்கறது ஒவ்வொரு இந்தியனோட கனவு. இது 2036ல நனவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. கனவு​களை ஒரே நாளில் அடைந்​து​விட முடி​யாது. அதுக்கு கடின உழைப்​பும் அர்ப்​பணிப்​பும் தேவை.

12 ஆண்​டு​களில், இந்​தியா பொறுமையா செயல்​பட்​டு, விளை​யாட்​டுத் துறைக்​கான கட்​டமைப்பை சிறப்பா அமைச்சு இருக்கு அப்படின்னும் பிரதமர் பேசி இருக்காரு.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in