இந்தியாவுக்கான வரி 18%ஆக குறைப்பு:டிரம்ப் அறிவிப்பு, மோடி வரவேற்பு

இந்தியாவுக்கான வரியை 25%ல் இருந்து 18% ஆக அமெரிக்கா குறைத்து இருக்கும் நிலையில், பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
Prime Minister Modi has welcomed the US's reduction of tariffs on India from 25% to 18%
Prime Minister Modi has welcomed the US's reduction of tariffs on India from 25% to 18%Goolge
2 min read

வரி விதிப்பை அதிகப்படுத்திய டிரம்ப்

US to cut tariffs on India to 18%, India agrees to end Russian oil purchases : அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியாவுடனான நல்லுறவு படிப்படியாக பாதிக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தொடக்கம் முதலே எதிர்த்து அதிபர் டிரம்ப், இதை காரணம் காட்டி இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தார்.

இந்தியா மீது 50% வரி

இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி (Reciprocal Tariffs) மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா.

இதனால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்த மத்திய பாஜக அரசு, மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை கணிசமாக அதிகரித்தது.

இந்தியாவிடம் தோற்ற அமெரிக்கா

இதற்கு சிகரம் வைத்தார் போன்று, ஐரோப்பிய யூனியனுடன், தாராள வர்த்தக ஒப்பந்தத்தையும் இந்தியா செய்து கொண்டது.

இதன் காரணமாக அமெரிக்காவில் இந்திய அரசை அடிபணிய வைக்க முடியாமல் போனது.

பரஸ்பர வரி 18% ஆக குறைப்பு

இந்தநிலையில், இந்தியாவுக்கான பரஸ்பர வரியை, அமெரிக்கா 18 சதவீதமாக குறைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

மோடியுடன் டிரம்ப் பேச்சு

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் டிரம்ப் தொலைபேசி மூலம் பேசினார் அப்போது இருதரப்புக்கும் இடையே இந்த உடன்பாடு ஏற்பட்டது.

இதை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு டிரம்ப் பாராட்டு

டிரம்ப் பதிவு: “பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர்.

வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர். வர்த்தகம், ரஷ்யா - உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

வெனிசுலாவில் இருந்து எண்ணெய்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த நகர்வு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்.

வரி விதிப்பு 18% ஆக குறைக்கப்படும்

பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் நான் கொண்டுள்ள மதிப்பு காரணமாக அவரது கோரிக்கையை ஏற்று வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து முடித்துள்ளோம்.

அந்த வகையில் பரஸ்பர வரி விதிப்பு 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும்.

இந்தியாவுடனான உறவு வலுப்பெறும்

தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்பிற்கு மோடி நன்றி

டிரம்பின் பதிவை வரவேற்று, பிரதமர் மோடியும் இந்திய மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியாவின் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்கும்.

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in