

இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல்
Prime Minister Narendra Modi became India's longest continuously serving democratically elected Prime Minister on June 10, 2026. He surpassed the 62-year-old record of Jawaharlal Nehru, who held the position continuously for 4,398 days :
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றியை ஈட்டிய ஜவஹர்லால் நேரு, 1952ம் ஆண்டு மே 13ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார்.
பிரதமராக நேரு சாதனை
தான் மறையும் வரை அதாவது, 1967ம் ஆண்டு மே 27ம் தேதி வரை பிரதமர் பொறுப்பில் இருந்தார் நேரு. இதன்மூலம் தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பிரதமராக அவர் இருந்து இருக்கிறார்.
நேருவிற்கு பிறகு, லால் பகதூர் சாஸ்திரி தொடங்கி மன்மோகன் சிங் வரை பலர் பிரதமராக பொறுப்பு வகித்தாலும். யாரும் அவரது சாதனையை நெருங்க கூட முடியவில்லை.
2014 முதல் பிரதமராக மோடி
நேருவின் மகளான இந்திரா காந்தி 4,077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். இந்தநிலையில், 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர தாமோதர தாஸ் மோடி, பிரதமராக பொறுப்பேற்றார்.
3வது முறை என்டிஏ ஆட்சி
அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக அவர் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். 2019 மக்களவை தேர்தல், 2024 மக்களவை தேர்தலிலும் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் நீடிக்கிறது.
இந்திராவின் சாதனை முறியடிப்பு
கடந்த ஆண்டு ஜூலை 25, அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தொடர்ச்சியாக பிரதமர் பதவி வகித்த காலத்தை, அதாவது 4,077 நாட்கள் சாதனையை மோடி முறியடித்திருந்தார்.
நேருவின் சாதனை முறியடிப்பு
தற்போது நேருவின் சாதனையையும் பிரதமர் மோடி முறியடிக்க இருக்கிறார். வரும் 10ம் தேதியோடு, அவர் பிரதமர் பதவிக்கு வந்து 4,399 நாட்கள் நிறைவு பெறுகிறது. இதன்மூலம், நேருவின் 4,398 நாட்கள்சாதனையை முறியடிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நீண்ட நாட்கள் பிரதமர்
இதன் மூலம் இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை மோடி பெருகிறார்.
மோடியின் சாதனை பயணம்
மோடியின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வியத்தக வளர்ச்சியின் பின்னணியில் இந்த சாதனை நிகழ்ந்து இருக்கிறது.
மக்கள்தொகை 146 கோடி
பிரதமராக நேரு நாட்டை வழிநடத்தியபோது, இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 34 கோடியாக இருந்தது. 2014ல் மோடி பதவியேற்றபோது, மக்கள் தொகை 131 கோடியை தாண்டி, அதன் பின் தற்போது 146 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் அரசியல் மாற்றங்கள்
மிகப்பெரிய மாற்றங்களை கண்டு வருகிறது இந்திய அரசியல். 1951-52ல் நடந்த முதல் பொது தேர்தலில் வெறும் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
2014ல் இந்த எண்ணிக்கை 464 ஆக உயர்ந்தது. கடந்த பொது தேர்தலில் கட்சிகளின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது.
முதல் பொதுத் தேர்தலின் போது சுமார் 17 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, 2014ம் ஆண்டில் 83 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. தற்போது, நமது வாக்காளர்கள் எண்ணிக்கை 97 கோடியாக இருக்கிறது. 2029 பொதுத்தேர்தலின் போது இது, 100 கோடியை எட்ட வாய்ப்பு இருக்கிறது.
மோடியின் சாதனை நிலைத்து நிற்கும்
2029 மே மாதம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல் வரை பிரதமராக மோடி இருப்பார். இதன் மூலம் இந்தியாவில் நீண்டகாலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்த சாதனையை வேறு ஒருவர் முறியடிப்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
=====================