

ஜி 20 உச்சி மாநாடு
PM Modi Participates G20 Johannesburg Summit 2025 Dates in South Africa : 20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இந்த கூட்டமைப்பு. 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
உலக நாடுகள் பங்கேற்பு
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்தது ஜி 20 அமைப்பாகும்.
தென்னாப்பிரிக்காவில் உச்சி மாநாடு
இதன் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது. 23ம் தேதி(G20 Johannesburg Summit 2025 Dates in South Africa) வரை நடைபெறும் மாநாட்டில், ஜி 20 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி பங்கேற்கிறார்
இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து அவர் இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளில் அவர் உரையாற்ற இருக்கிறார்.
உலகத் தலைவர்களுடன் சந்திப்பு
மாநாட்டின் போது உலக நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
சிறப்பு வாய்ந்த மாநாடு - மோடி
தென்னாப்பிரிக்க பயணம் குறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு. பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா புறக்கணிப்பு
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் வெள்ளையர்கள் குறிப்பாக விவசாயிகள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பும் விதமாக,. “மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை அமெரிக்கா பிரதிநிதித்துவம் செய்யாது” என்று டிரம்ப் விளக்கம் அளித்தார்.
=================