"மேற்கு வங்கத்தில் பாஜக அலை" மக்கள் பேராதரவு! : திரிணாமுல் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் : பிரதமர் திட்டவட்டம்!

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு, திரிணாமூல் காங்கிரசை நிலைகுலையச் செய்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Prime Minister Modi said that people's support for BJP in West Bengal, destabilized Trinamool Congress
Prime Minister Modi said that people's support for BJP in West Bengal, destabilized Trinamool Congressgoogle
1 min read

அதீத வாக்குப்பதிவு

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. 152 தொகு​திகளில் நடந்த வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவு 92. 72 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

29ம் தேதி 2ம் கட்ட தேர்தல்

இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் வரும் 29ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ​

ஆட்சி மாற்றத்திற்கான அலை

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ” மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவு வாக்குபதிவு வீதத்தை மக்கள் சாத்தியமாக்கி உள்ளனர். இதன் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியுள்ளது மற்றும் பாஜக-விற்கு பேராதரவு கிடைத்துள்ளது.

திரிணாமூல் அதிர்ச்சி

இதை கண்டு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டுள்ளது என்று கூறி உள்ளார். இரண்டாம் கட்ட தேர்தலிலும் இதே போல வாக்கு சதவீதம் அதிகரிக்கும்,

காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி

மே 4ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின் போது திரிண​முல் காங்​கிரஸ் கட்சியின் காட்​டாட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும். முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஜனநாயக கோவிலை மீண்டும் கட்டியெழுப்பி விட்டனர்.

மக்களின் கனவு நனவாகும்

மேற்குவங்க மக்களின் கனவுகள் நசுக்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு அமைந்தவுடன் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஒவ்வொரு அநீதிக்கும் பாடம் கற்று தரப்படும்.

தவறு இழைத்தோர் தப்பிக்க முடியாது

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​கள் அனைத்​தும் மீண்​டும் விசா​ரிக்​கப்​படும். தவறு இழைத்​தவர்​கள் தப்​பிக்க முடி​யாது. அவர்​கள் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள்.

மம்தா சிண்டிகேட் ஆட்சி

மாநிலத்தை "சிண்டிகேட்ஸ்" வாயிலாகவே மம்தாவின் கட்சி நிர்வகித்து வருவதாக மோடி குற்றம் சாட்டியதுடன், அக்கட்சியை ஒரு "கொடுமையான மற்றும் ஊழல் மிகுந்த" சக்தியாகவும் வர்ணித்தார்.

வங்கதேச ஊடுருவலை திரிணாமூல் ஊக்குவிப்பதாகவும், இது மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றி கலவரங்களை ஏற்படுத்துவதாகவும்” பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in