Vande Mataram: அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் : மோடி பெருமிதம்

PM Modi on Vande Mataram Song 150th Year Debate in Parliament : அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றவர்களாக இந்தியர்கள் வாழ்வதை உறுதி செய்த பாடல் வந்தே மாதரம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Prime Minister Modi said that Vande Mataram is the song that ensured that Indians live free from slavery
Prime Minister Modi said that Vande Mataram is the song that ensured that Indians live free from slaverySansad TV
1 min read

வந்தே மாதரம் - சிறப்பு விவாதம்

PM Modi on Vande Mataram Song 150th Year Debate in Parliament : நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150வது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயரை எதிர்க்க இந்தியர்களின் அகிம்சை ஆயுதமாக இந்தப் பாடல் பயன்பட்டது. தேசிய பாடலான வந்தே மாதரத்தை பெருமைப் படுத்தும் வகையில், நாடாளுமன்ற மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.

சிறப்பு விவாதம் - பிரதமர் உரை

இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். “ வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை. இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். வந்தே மாதரம் விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம். ஏதுமில்லை.

சுதந்திரத்திற்கு காரணம் ‘வந்தே மாதரம்’

வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தினால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை. வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது.

பங்கிம் சட்டர்ஜியின் பாடல்

வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்க்க, 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார். இது நமது உயிர்மூச்சாக இந்தியா விடுதலை பெற வழி வகுத்து கொடுத்தது.

2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியா

2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாக, வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்ட போது, நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.

இளைஞர்களுக்கு நினைவூட்டல்

வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தின் மூலம், எதிர்கால தலைமுறையினர் வந்தே மாதரம் பாடல் குறித்து அறிந்து கொள்ள முடியும். எதிர்பார்பாராத விதமாக, வந்தே மாதரத்தின் 100ம் ஆண்டில் அவசர நிலையை நாம் சந்தித்தோம்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in