”மக்கள்தான் எனது குடும்பம்” : ஆட்சி மாற்றம் நிச்சயம், பதவியேற்பு விழாவிற்கு வருவேன் : மேற்கு வங்கத்தில் மோடி உறுதி!

மக்கள் தான் தனது குடும்பம் என்று, மேற்கு வங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
Prime Minister Modi stated in his West Bengal campaign that the people are his family
Prime Minister Modi stated in his West Bengal campaign that the people are his familygoogle
1 min read

மேற்கு வங்க தேர்தல்

after adjoining Odisha and Bihar, lotus will bloom in West Bengal this time, "I will return for BJP's oath-taking after May 4": PM Modi expresses confidence in Bengal win : மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் இன்று மாலையோடு பிரசாரம் ஓய்கிறது. முதற்கட்ட தேர்தலில் வரலாறு காணாத வாக்குகள் பதிவானதால், ஆட்சி மாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மோடி vs மம்தா

நான்காம் முறையாக ஆட்சியில் தொடர மம்தா பானர்ஜியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் அடுத்த அரியணை யாருக்கு என்பது மே 4ம் தேதி தெரிய வரும்.

ஆட்சி மாற்றம் நிச்சயம்

இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். பராக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், ”மேற்கு வங்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மக்களே எனது குடும்பம்

அனைவரின் மத்தியிலும் வாழ்வதே எனக்கு மகிழ்ச்சி. மக்கள் தான் எனது குடும்பம். மேற்கு வங்கத்திற்கு சேவையாற்றுவதும், மக்களை காப்பதும் விதியல்ல. அது எனது கடமை.

மாற்றமே மக்களின் விருப்பம்

மேற்கு வங்க ஆளுமைகளிடம் இருந்து உத்வேகத்தையும், மக்களிடம் இருந்து அன்பையும் பெற்று இருக்கிறேன். மாநிலம் முழுவதும் ஒலிக்கும் ஒரே சொல் “ மாற்றம், மாற்றம்”.

பதவியேற்பு விழாவுக்கு வருவேன்

நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். எனவே, மே 4ம் தேதிக்கு பிறகு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருவேன். என்னை பார்க்க இந்த அளவு மக்கள் வந்து இருக்கிறார்கள் என்பதே நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.

திரிணாமூல் மீது கடும் வெறுப்பு

ஆளும் திரிணாமூல் கட்சி மீது மக்களுக்கு எந்த அளவு வெறுப்பு இருக்கிறது என்பதே, இதற்கு சாட்சி. மேற்கு வங்கத்தில் வளர்ச்சி இல்லை. திரிணாமூல் காங்கிரஸ் அல்லது காங்கிரசுக்கு வளர்ச்சி மீது நம்பிக்கை இல்லை.

இரட்டை இன்ஜின் அரசு

வளர்ச்சியை துரிதப்படுத்த இரட்டை இன்ஜின் அரசு தேவை. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட வேண்டும்” என்று பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in