

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தோடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு, சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
செய்தியாளர்களை சந்தித்த மோடி
மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் சாதனைகள்
விண்வெளி துறையில இந்தியா சாதனை படைச்சு இருக்கு. முதல் தனியார் ராக்கெட், விக்ரம்-1 வெற்றிகரமா விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கு. இந்த சாதனையை படைச்ச தனியார் நிறுவன விஞ்ஞானிங்க, அவர்களுக்கு உதவியா இருந்த இஸ்ரோவுக்கு மோடி பாராட்டு தெரிவிச்சாரு.
ராகுலை கிண்டலடித்த மோடி
இளைஞர்களோட சாதனைகளை புகழ்ந்த அவரு, 56 வயது இளைஞரை பத்தி தான் சொல்லல அப்படின்னு, ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினாரு.
ஹைட்ரஜன் ரயில், செமி கண்டக்டர் ஆலை
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம், ராஜஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, அதேபோல 3வது செமி கண்டக்டர் ஆலை என வளர்ச்சி பாதையில இந்தியா பயணிச்சு வருது.
இந்தியாவின் வளர்ச்சியில் பின்னடைவு இல்லை
மேற்காசிய போர் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கவில்லை, இதை அனைவரும் புரிஞ்சிக்கணும், உலக அளவில இந்தியா மீது நம்பிக்கை அதிகரிச்சு இருக்கு. எல்லா சவால்களையும் இந்தியா வெற்றிகரமா சமாளிச்சு இருக்கு.
பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்
உலக அளவில பெரிய அளவில வளருகிற பொருளாதாரமா இந்திய தொடர்ந்து முதலிடத்தில இருக்க. இது தொடரும்.
எனவே இன்னிக்கு தொடங்குற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமா இருக்கணும், அனைத்து கருத்துக்களையும் அனைவரும் மதிக்கணும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
7 மசோதாக்கள் தாக்கல்
மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13ம் தேதி வரை நடக்க உள்ளது. நாட்டில் உயர்கல்வியை நிர்வகிக்க தனித்தனியே செயல்படும் யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஆகியவற்றை கலைத்துவிட்டு, ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ அமைக்க வகை செய்யும் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ மசோதா.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா ஆகியவை ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அவற்றை இந்த கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வருமான வரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, பிறப்பு - இறப்பு பதிவு, குறு, சிறுதொழில் மேம்பாடு தொடர்பான திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
‘வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் தேசிய கவுரவ திருத்த மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு தாக்கலா?
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதாக்கள் தோல்வி அடைந்தன.
இந்த மசோதாக்களை மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
‘உறுப்பினர் பதவிக்கு பாதிப்பு இல்லாமல் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம். நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டால் மீண்டும் பதவியேற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்களை செய்யலாம்’ என்று கூட்டுக்குழு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மக்களவையில் என்டிஏ பலம் 319
மக்களவையில் 540 எம்.பி.க்கள் உள்ளனர். மசோதாக்களை நிறைவேற்ற 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், சிவசேனாவின் உத்தவ் அணியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் சமீபத்தில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இதனால், மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் சரத்பவார் அணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
=================