”செஷெல்ஸ் தீவில் தமிழர்களின் நவசக்தி விநாயகர் கோவில்” : பிரதமர் மோடி வழிபாடு : உலக அமைதிக்காக பிரார்த்தனை...!

செஷெல்ஸ் தீவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள விநாயகர் கோவிலில், வழிபாடு நடத்தினார்.
Prime Minister Modi, who is visiting the Seychelles, offered prayers at the local Vinayagar temple.
Prime Minister Modi, who is visiting the Seychelles, offered prayers at the local Vinayagar temple.AI generated
1 min read

செஷெல்ஸ் தீவில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 3 அரசு முறைப்பயணமாக சீஷெல்ஸ் தீவிற்கு சென்று இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட அவருக்கு, அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - செஷெல்ஸ் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. தீவில் உள்ள உலகின் பழைமையான 194 வயது ஆமையையும் பிரதமர் மோடி கண்டு வியந்தார்.

நவசக்தி விநாயகர் கோவில்

செஷெல்ஸ் தலைநகரான விக்டோரியாவில் நவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த தீவில் வசிக்கும் தமிழர்கள் சேர்ந்து, கலைநயம் மிக்க இந்த கோவிலை கட்டி இருக்கின்றனர்.

செஷெல்ஸ் நாட்டில் உள்ள ஒரே இந்துக் கோவிலான இது, தென்னிந்திய கட்டிடக்கலை, பாரம்பரியம் மிக்க ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது.

பிரதமர் மோடி வழிபாடு

கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்த பிரதமர், பின்னர் அங்குள்ள மற்ற தெய்வங்களின் சன்னிதிக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.

இந்தியர்களுடன் அளவளாவல்

உலக அமைதி, நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பிரதமர் வழிபாடு நடத்தியதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தன்னை காண திரண்டு இருந்த பொதுமக்களையும் சந்தித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி.

இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு

செஷெல்ஸ் தீவின் வளர்ச்சியில், இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

---------------

logo
Thamizh Alai
www.thamizhalai.in