Makhanlal Sarkar : தரையில் விழுந்து வாக்காளர்களுக்கு நன்றி : மோடியை வாழ்த்திய 98 வயது பாஜக நிர்வாகி!

மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, 98 வயது முதியவரிடம் ஆசி பெற்றது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Prime Minister Modi, who visited West Bengal, received blessings from a 98-year-old man
Prime Minister Modi, who visited West Bengal, received blessings from a 98-year-old mangoogle
1 min read

மேற்கு வங்கம் - பாஜக ஆட்சி

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 207 இடங்களை கைப்பற்றிய பாஜக, முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. வெற்றிக்கு காரணகர்த்தாவான சுவேந்து அதிகாரி, முதல்வராக பதவியேற்றார்.

சுவேந்து அதிகாரி பதவியேற்பு

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டார்கள்.

முதியவரிடம் ஆசிபெற்ற மோடி

பதவியேற்பு விழாவின் போது முதியவர் ஒருவரின் காலில் விழுந்து ஆசி பெற்றது கவனம் ஈர்த்து உள்ளது. அந்த முதியவர் யார்? எதற்காக அவர் மேடையேறினார்? மோடியை ஆசிர்வதித்த காரணம் என்ற கேள்விகள் எழுந்தன.

யார் அந்த முதியவர்?

அதற்கு சுவாரஸ்யமான பதில்கள் கிடைத்துள்ளன. 98 வயது மதிக்கத்தக்க மக்னலால் சர்க்காரின் கால்களில் விழுந்து ஆசிபெற்றுள்ளார் பிரதமர் மோடி. இதன் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

தேசியக் கொடி ஏந்தியதால் கைது

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தேசியவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆரம்பகால அடிமட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1952-ல், இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றும் இயக்கத்தின் போது காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இவர்.

1980 முதல் பாஜகவில்...

1980-ல் பாஜக உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்னலால் சர்க்கார் மேற்கு தினாஜ்பூர், ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் மாவட்டங்களுக்கான அமைப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

10,000 உறுப்பினர்களை பாஜகவில் சேர்க்க இவர் உதவினார். 1981 முதல், அவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் மாவட்டத் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.

மக்னலால் சர்க்கார்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேசியவாதப் பாடல் ஒன்றைப் பாடியதற்காக மக்னலால் சர்க்கார் ஒருமுறை டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி முன்பும் அதே பாடலைப் பாடினார்.

உடனே நீதிபதி மக்னலால் டெல்லியில் இருந்து தன் வீட்டுக்கு திரும்ப முதல் வகுப்பு விமான டிக்கெட்டையும், பயணச் செலவிற்காக 100 ரூபாயையும் ஏற்பாடு செய்யுமாறு சொன்னார்.

விழுந்து வணங்கிய மோடி

அப்படிப்பட்ட மாமனிதரிடம் தான் பிரதமர் மோடி ஆசி பெற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி, கூடியிருந்த பொதுமக்கள் முன்பு தரையில் விழுந்து வணங்கி, தனது நன்றி தெரிவித்துக் கொண்டார் பிரதமர் மோடி.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in