’நிதின் நவின் பாஸ், நான் தொண்டன்’: மோடி பேச்சு, பாஜகவினர் உற்சாகம்

PM Narendra Modi Speech at Nitin Nabin New BJP President Event : பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தான் பாஸ், நான் எப்போதும் தொண்டன் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி பெருக்குடன் தெரிவித்தார்.
Prime Minister Modi happily said that BJP national president Nitin Nabin is the boss and I am always a follower
Prime Minister Modi happily said that BJP national president Nitin Nabin is the boss and I am always a followerhttps://x.com/BJP4India
1 min read

பாஜக தலைவர் நிதின் நபின்

PM Narendra Modi Speech at Nitin Nabin New BJP President Event : பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பிகார் மாநிலத்தை சேர்ந்த 45 வயதாகும் நிதின் நபின், இளம் தலைவர் என்ற பெருமையோடு பாஜகவை வழிநடத்த போகிறார்.

முறைப்படி பொறுப்பேற்றார்

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி வாழ்த்து

நிதின் நபினை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அவரை வாழ்த்தி பேசினார். ” உலகின் மாபெரும் கட்சியான பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்று இருக்கிறார்.

அவருக்கு எனது உளமாற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை வலுப்படுத்த பங்களித்த முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

நான் கட்சியின் ஊழியன்

நிதின் நபின் தலைவராக பொறுப்பேற்றதோடு இது நின்று விடாது. என்டிஏ ( தேசிய ஜனநாயக கூட்டணி ) ஒருங்கிணைப்பை உறுதி செய்வது முக்கிய பணியாக இருக்கும். கட்சியின் ஊழியனாக இப்போதும் இருப்பது எனக்கு பெருமை தான்.

நிதின் நபின் தான் ”பாஸ்”

நிதின் நபின் தான் எனது பாஸ். கட்சியின் தலைவர்கள் மாறலாம், கொள்கை மாறாது. தலைமை மாறலாம், வழி மாறாது. வித்தியாசமான கட்சியாக உருவெடுத்த பாரதிய ஜனதா, இப்போது ஆளுங் கட்சியாக இருக்கிறது.

இனி கட்சி தொடர்பான முடிவுகளை நிதின் நபின் தான் எடுப்பார். இளம் வயதாக இருந்தாலும், அவரது அனுபவம் பாஜகவை வளர்க்கும். கட்சி தொண்டர்களுக்கும் பயனளிக்கும்.

கேரளாவிலும் பாஜக ஆட்சி தான்

ஒரு அரசு நீண்ட காலம் அரசை நடத்துவது கடினம். இதை பாஜக முறியடித்து இருக்கிறது. பல மாநிலங்களில் இப்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. விரைவில் கேரளாவிலும் பாஜக ஆட்சியை அமைக்கும்” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக புதிய தலைவர் நிதின் நபினை தனது பாஸ் என்று அவர் குறிப்பிட்டது பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

==========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in