Modi 25 Years பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் : குஜராத் முதல்வர், இந்தியாவின் பிரதமர் : நரேந்திர மோடியின் சாதனைகள்..!

பொது வாழ்க்கையில் அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகளை பிரதமர் மோடி நிறைவு செய்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
Prime Minister Narendra Modi has completed 25 years in public office
Prime Minister Narendra Modi has completed 25 years in public officesource:thamizhalai,ai generated
2 min read

மூன்று முறை பிரதமர்

சுதந்திர இந்திய வரலாற்றில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற இரண்டாவது தலைவர் நரேந்திர மோடி மட்டுமே ஆவார்.

13 ஆண்டுகள் குஜராத் முதல்வர்

குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்த இவர், 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் ஆனார்.

பிரதமரானவுடன் சீர்மிகு திட்டங்கள்

பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் அனைத்துவிதமான வளர்ச்சி கொண்ட பயணத்திற்காக வழிவகுத்தார்.

கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள்

சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்களின் பலன் சென்றடையும் நோக்கில் ‘அந்தியோதயா (Antyodaya) கொள்கையை’ அமல்படுத்தினார்.

2014ஆம் ஆண்டு அனைவருக்கும் வங்கிக் கணக்கு எனப்படும் 'ஜன் தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரப்பட்டனர். இதன்மூலம் அரசின் திட்டங்கள், மானியங்கள் நேரடியாக மக்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன.

அதே ஆண்டில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று தூய்மையான இந்தியா இயக்கத்தை நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் மூலம் கிராமப்புறங்களில் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டு, சுகாதார மேம்பாடு முன்னெடுக்கப்பட்டது.

உஜ்வலா திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு கோடிக்கணக்கான எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் ஏழை, நடுத்த வருவாய் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் திட்டம் கிராமங்கள் மட்டுமன்றி, நகர்ப்புறங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ஜல் ஜீவன் மூலம் கிராமப்புறங்களில் வீடுகளுக்கே குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சிறு தொழில் மற்றும் சுயதொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் மூலம் முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பிணையில்லாமல் வழங்கப்படும்

முத்ரா கடனின் அதிகபட்ச வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசில் டிஜிட்டல் இந்தியா மற்றும் UPI மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும், அரசு சேவைகளின் டிஜிட்டல் பயன்பாடும் வேகமாக வளர்ந்துள்ளன.

ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, செமிகண்டக்டர் மிஷன், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட முயற்சிகள் மூலம் தொழில்முனைவு, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

UDAN திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

பிரதமராக மோடியின் சாதனைகள்

2023ம் ஆண்டு இந்தியா G20 தலைமைப் பொறுப்பை ஏற்று டெல்லியில் உச்சி மாநாட்டை மோடி தலைமையிலான அரசு நடத்தியது.

சந்திரயான்-3 வெற்றி விண்வெளித் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனையாக அமைந்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நிறைவடைந்து, 2024 ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை நடைபெற்றது.

2014ம் ஆண்டில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று, 2025ல் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை முன்னணி நாடாக உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு 25 ஆண்டுகள் அரசு பொதுவாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 2029 லோக்சபா தேர்தலிலும் மத்தியில் பாஜக ஆட்சியை தொடர, தொடர்ந்து 4 முறை பிஜேபி அரசு என்ற இலக்கினை எட்ட வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in