
103 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் :
PM Narendra Modi Independence Day 2025 Speech : டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.. அதைத்தொடர்ந்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த உரை (Narendra Modi speech) சுமார் 105 நிமிடங்கள் வரை நீடித்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடியின் இந்தச் சுதந்திர தின உரை மிக நீண்டதாக இடம் பெறுகிறது.
தனது சாதனையை முறியடித்த மோடி :
இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைகளில் இதுதான் மிக நீண்டது. காலை 7.33 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய மோடி, 9.16 மணிக்கு நிறைவு செய்தார். கடந்த ஆண்டு அவர் 98 நிமிடங்கள் பேசியதே சாதனையாக இருந்த நிலையில், அதை அவரே இப்போது முறியடித்துள்ளார்.
12 முறை சுதந்திர தின உரை :
பிரதமர் மோடி தொடர்ந்து 12 முறை செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக முறை சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்கள் பட்டியலில், அவர் 2வது இடத்தில் இருக்கிறார். ஜவஹர்லால் நேரு 17 முறை தொடர்ந்து உரையாற்றிய நிலையில், மோடி 12 முறை உரை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்திராவின் சாதனை முறையடிப்பு :
இந்திரா காந்தி 16 முறை சுதந்திர தின உரையை ஆற்றியிருந்தாலும் இடையில் மூன்று ஆண்டுகள் அவர் ஆட்சியில் இல்லாமல் இருந்தார். அவர் தொடர்ச்சியாக 11 முறை உரையாற்றினார். அதை நரேந்திர மோடி முறியடித்து இருக்கிறார்.
======