"தலைமைப் பதவியில் 8,931 நாட்கள்" : 14 ஆண்டு முதல்வர், 11 ஆண்டுகள் பிரதமர் : நரேந்திர மோடி புதிய சாதனை!

8,931 நாட்களாக தலைமை பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
Prime Minister Narendra Modi has set a new record by remaining in office for 8,931 days
Prime Minister Narendra Modi has set a new record by remaining in office for 8,931 daysgoogle
1 min read

தலைமைப் பொறுப்பில் மோடி

8,931 Days In Office, PM Modi Becomes India's Longest-Serving Head Of Government : குஜராத் மாநிலத்தில் பிறந்த நரேந்திர தாமோதர தாஸ் மோடி, 2001ம் ஆண்டு அம்மாநில முதல்வரானார். 2014 மே 21 வரை அவர் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்தப் பொறுப்பில் இருந்தார். மூன்று முறை தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை மோடி அலங்கரித்தார்.

பின்​னர் 2014 மக்​கள​வைத் தேர்​தலில் போட்டியிட்டு வென்ற அவர், நாட்​டின் பிரதம​ராகப் பொறுப்பேற்றார். பின்​னர், 2019 மற்​றும் 2024 மக்​கள​வைத் தேர்தல்​களி​லும் வெற்றி பெற்று தற்​போது மூன்​றாவது முறையாகப் பிரதம​ராக நீடிக்​கிறார்.

சிக்கிம் முதல்வரின் சாதனை முறியடிப்பு

அந்த வகையில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை பொறுப்பை தொடர்ச்சியாக பிரதமர் மோடி வகித்து வருகிறார். இதற்கு முன்பு சிக்​கிம் மாநில முதல்​வ​ராக 24 ஆண்​டு​களுக்​கும் மேலாக (8,930 நாட்​கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்​லிங்​கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்​துள்​ளார்.

நாட்டின் மீது பக்தி - ராஜ்நாத் பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், "பிரதமர் நரேந்​திர மோடி இப்​போது இந்​தி​யா​வில் மிக நீண்ட காலம் அரசுத் தலை​வ​ராக இருந்​தவர் என்ற பெருமை​யைப் பெறுகிறார்.

நாட்​டின் மீதும் மக்​கள் மீதும் கொண்டுள்ள தூய பக்​தியே பிரதமர் மோடியை வரையறுக்​கிறது. குஜ​ராத் முதல்​வ​ராக அவர் காட்​டிய உறுதி முதல், பிரதம​ராக அவர் வழங்​கும் அர்ப்​பணிப்​புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்​சி​யான சேவைப் பயண​மாகும்" என கூறியுள்​ளார்.

அர்ப்பணிப்பே அவரது உறுதி - அமித் ஷா

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில், "சேவை, கடின உழைப்பு மற்​றும் அசைக்க முடி​யாத அர்ப்பணிப்பில் உரு​வான மைல்​கல் இது. பிரதமர் நரேந்​திர மோடி, சிக்​கிம் முன்​னாள் முதல்​வர் பவன் குமார் சாம்​லிங்​கின் 8,930 நாட்​கள் சாதனையை முறியடித்​து, இந்​தி​யா​வின் நீண்​ட​கால அரசுத் தலை​வ​ராகி இருக்கிறார்.

8,931 நாட்கள் பொதுவாழ்வு

முதலில் குஜ​ராத் முதல்​வர், தற்போது பிரதமர் என 8,931 நாட்​கள் பொது​வாழ்​வில் அவர் இருப்பது, ‘தேசமே முதல்' என்ற கொள்​கைக்​கும், நேர்​மை​யான செயல்​பாட்​டுக்​கும், அயராத மக்​கள் சேவைக்​கும் சான்​றாகும்" என கூறி​யுள்​ளார்.

இன்​ஸ்​டா​வில் 10 கோடி

இந்த சாதனையைத் தவிர, பிரதமர் மோடி​யின் உலகளா​விய டிஜிட்​டல் செல்​வாக்​கும் அதிகரித்து வரு​கிறது. இன்​ஸ்​டாகி​ராமில் 10 கோடி பின்​தொடர்பாளர்​களைக் கடந்த முதல் உலகத் தலை​வர் என்ற பெருமையை அவர் சமீபத்​தில் பெற்​றார்.

இது அதிபர் டொனால்டு ட்ரம்​பின் (4.3 கோடி) பின்​தொடர்​பாளர்​களை​விட 2 மடங்​கு அதி​கமாகும்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in