Narendra Damodardas Modi : இன்ஸ்டாகிராமில் 10 கோடி followers : முதல் அரசியல்வாதி, உலகத் தலைவர் : சாதித்த பிரதமர் மோடி

Prime Minister Narendran Modi 100 Million Instagram Followers : இன்ஸ்டா உலகில் 10 கோடி ஃபாலோயர்சை கொண்டிருக்கும் உலகின் முதல் தலைவர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.
Prime Minister Modi has set a record by becoming the first world leader to have 100 million followers on Instagram
Prime Minister Modi has set a record by becoming the first world leader to have 100 million followers on Instagramgoogle
1 min read

சமூக வலை தளங்கள்

PM Narendra Modi Becomes First World Leader To Cross 100 Million ( 10 crore ) Followers On Instagram : உலக நாடுகளின் தலைவர்களை மக்கள் இன்ஸ்டா போன்ற சமூக வலை தளங்கள் மூலம் பின் தொடர்கிறார்கள். தொழில்நுட்பம் நிறைந்த உலகில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாததாகி விட்டது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர்.

இன்ஸ்டாவில் ஃபோலோயர்ஸ்

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 2014ம் ஆண்டு இணைந்தார் பிரதமர் மோடி. இதுபடிப்படியாக வளர்ச்சி கண்டு, தற்போது 10 கோடி ஃபாலோயர்களை பெற்று இருக்கிறது. இந்த அரிய சாதனையை நிகழ்த்திய முதல் அரசியல்வாதி என்ற பெருமையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.

டிரம்பை மிஞ்சிய மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரேசில் அதிபர் 14.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் நான்காவது இடத்தையும், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் 11.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் 6.4 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பட்டியலில் அடுத்ததாக இருக்கும் ஐந்து முக்கிய உலகத் தலைவர்களின் மொத்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை, பிரதமர் மோடியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மோடிக்கு அடுத்து யோகி

இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

3வது இடத்தில் ராகுல்

காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி 12.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in