

நரேந்திர தாமோதர தாஸ் மோடி
பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, இன்று உலகெங்கும் உச்சரிக்கப்படும் பெருமைக்குரிய பெயர். தேநீர் விற்பனையாளராக தொடங்கி அவரது வாழ்க்கை, ஆர்எஸ்எஸ் மூலம் கூர்மைப்படுத்தப்பட்டு, குஜராத் முதல்வராக்கி அழகு பார்த்தது.
56 ஆண்டுகள் தீவிர அரசியல்
2014ல் பிரதமராக தேசிய அரசியலில் காலடி எடுத்து வைத்த மோடி, தனது அரசியல் பயணத்தில் பல வரலாற்று சாதனைகளை குவித்து வருகிறார். உலக அரங்கில் இந்தியா வல்லரசுக்கு இணையாக, தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு பிரதமர் மோடியின் அளப்பரிய பணியே காரணம்.
மோடியின் அரசியல் பயணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வெற்றிக் கதை. 1970களில் தொடங்கிய இவரது அரசியல் பயணம் 56 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் சேவையோடு நீடிக்கிறது.
ஆர்எஸ்எஸ் பிரசாரகராக பணி
1970ல் RSS பிரச்சாரகராக பணியை தொடங்கிய மோடி, பின்னர், குஜராத்தில் பாஜகவின் முக்கிய தலைவராக உயர்ந்தார். 2001 முதல் 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து பணியாற்றினார்.
குஜராத் முதல்வராக...
அவர் செயல்படுத்திய சீர்திருத்த நடவடிக்கைகள், குஜராத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றது. அப்போது மோடி விதைத்த விதைதான், இன்று வரை குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருக்க வழி வகுத்து இருக்கிறது.
தேசிய அரசியலில் மோடி
2014ம் ஆண்டு தேசிய அரசியல் அவரை அழைக்க, பிரதமர் வேட்பாளராக பொதுத்தேர்தலை சந்தித்தார் நரேந்திர மோடி. அவரது சிறப்பான பிரசாரம், தேர்தல் யுத்திகள், பொதுத்தேர்தலில் பாஜகவை அறுதிப் பெரும்பான்மையோடு அரியணை ஏற்றியது.
முதன்முறையாக இந்தியாவின் பிரதமரான.நரேந்திர மோடியின் அரசியல் பயணத்தின் இது முக்கிய மைல்கலாக அமைந்தது.
இந்தியாவின் 14வது பிரதமர்
இந்தியாவின் 14வது பிரதமரான மோடி, 2019 பொதுத்தேர்தலிலும் வாகை சூடினார். 2024 லோக்சபா தேர்தலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்து கொடுக்க 3வது முறையாக பிரதமராக கோலோச்சி வருகிறார் நரேந்திர மோடி.
மோடியின் சீர்மிகு திட்டங்கள்
'மேக் இன் இந்தியா', 'தூய்மை இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' போன்ற மோடி அரசின் தொலைநோக்குத் திட்டங்கள், கொள்கை முடிவுகள், வெளியுறவு கொள்கைகள் இந்தியாவை பலமடங்கு வலிமையாக்கி இருக்கிறது.
12 ஆண்டுகள் பிரதமராக...
12 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமர் என்ற உயரிய பொறுப்பில் இருக்கும் மோடி, 56 ஆண்டுகளாக அரசியலில் தொடர் வெற்றி என்ற சாதனையாளராக திகழ்ந்து வருகிறது. 12 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுப்பு எடுக்காத தலைவரும் இவர்தான்.
உயரிய விருதுகள், இந்தியாவின் குரல்
பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகள், 19 நாடுகளின் நாடாளுமன்றங்களில் இந்தியாவின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தது மோடியின் சாதனைகளாகும்.
நேருவை விஞ்சிய மோடி
இந்தநிலையில், இந்தியாவின் நீண்ட கால பிரதமராக நேற்று வரை ஜவஹர்லால் நேரு வசம் இருந்த சாதனையை இன்று முறியடித்து இருக்கிறார் நரேந்திர மோடி.
நேரு பிரதமராக 4,398 நாட்கள்
இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற நேரு, 4 ஆயிரத்து 398 நாட்கள் அந்தப் பதவியை வகித்தார். அவருக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி தொடங்கி, டாக்டர் மன்மோகன் சிங் வரை யாராலும் இதை முறியடிக்க முடியவில்லை.
மோடி பிரதமராக 4,399 நாட்கள்
சுமார் 60 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத, எட்ட முடியாத இந்த மைல்கல்லை 4 ஆயிரத்து 399 நாட்கள் பிரதமர் என்ற அடையாளத்தோடு, கடந்து இருக்கிறார் பிரதமர் மோடி.
சாதனையை முறியடிக்க முடியுமா?
இதன் மூலம் இந்தியாவில் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். 2029வரை மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்க போகிறது. அதுவரை பிரதமராக இருக்க போகும், மோடியின் சாதனையை முறியடிக்க இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
=====================