
79வது சுதந்திர தின விழா :
நாடு முழுவதும் 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகரமான டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.
தேசிய கொடியை ஏற்றினார் மோடி :
இதையொட்டிபிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு சென்றார்.
12வது முறையாக கொடியேற்றம் :
அங்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர், நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து இருக்கிறார் மோடி. இதையடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம்.
இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு :
பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சுதந்திர தின விழாவில் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டோர், பள்ளி சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர்.
=============