

அடல் பிஹாரி வாஜ்பாய்
PM Modi pays tribute to Atal Bihari Vajpayee Birth Anniversary : பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்தியில் முதல்முறையாக ஆட்சி நடத்தியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 1996ம் ஆண்டு 13 நாட்களும், 1998 முதல் 1999 வரை 13 மாதங்களும், அதைத் தொடர்ந்து 1999 முதல் 2004 வரையிலான முழு கால அளவுக்கும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.
9 முறை எம்பியாக இருந்தவர்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், 50 ஆண்டுகள் எம்பியாக அதாவது, மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அடல் பிஹாரி வாஜ்பாய் பணியாற்றினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் 100வது பிறந்தநாள்
நேர்மையான அரசியல் தலைவராக, கவிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
லக்னோவில் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடம்
லக்னோவின் புறநகரில் உள்ள ஹார்டோய் சாலையில் கோமதி நதிக்கரைக்கு அருகில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, அடல் பிஹாரி வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
மக்களின் இதயங்களில் அடல் பிஹாரி வாஜ்பாய்
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார்.
ஆளுமைமிக்க அடல் பிஹாரி வாஜ்பாய்
அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், சக்திவாய்ந்த கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆளுமை, பணி மற்றும் தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும்” என்று தனது பதிவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார்.
=====================