இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது
PM Modi about Organic Farming in India : பட்ஜெட்டில் ஒவ்வொரு பைசாவும், உரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவதை உறுதி செய்வதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும் . நீண்ட கால வளர்ச்சி பயணத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது .
விவசாயம் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாக இருக்கிறது என்றும் அதனை செயல்படுத்த விவசாய துறையை அரசு வலுப்படுத்தி வருகிறதாகவும் ,செயற்கை விவசாயத்தை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .
பிரதமர் கிசான் திட்டம்- விவசாயிகள் பயன்
இது குறித்து [பேசிய பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தவும் , ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தியாவில் காலநிலை மறுபாடுகளுக்கு ஏற்ப நம்முடை விவசாயம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் .
தமிழக, கேரள விவசாயிகள் நன்மைக்காக தேங்காய்க்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ,பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்று விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற வளர்ச்சியில் இலக்கு
பொருளாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்வேறு அரசு திட்டங்கள் விவசாயிகளுக்கான அணைத்து இன்னல்களை தீர்த்து வருவதாகவும்,எங்களுடைய அரசு கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்து வருகிறது என்றும்
2029ம் ஆண்டுக்குள் மேலும் 3 கோடி பெண்களை மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் பிரதமர் உரையாற்றினார்.