

ராஜ்யசபாவில் 37 எம்பிக்கள் ஓய்வு
In politics, there's no full stop: PM bids farewell to Rajya Sabha members; hails Deve Gowda, Kharge, Sharad Pawar : 10 மாநிலங்களில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 37 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது.
காலியாகவுள்ள இந்தஇடங்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
இந்தநிலையில் ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அவர்களுக்கு பிரியாவிடை அளித்து பேசிய அவர், “ மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன; அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது தனித்துவமான பங்கை ஆற்றியுள்ளனர்.
பொதுவாழ்வில் அதிக நாட்கள்
மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், தேவ கவுடா ஆகியோர் தங்கள் வயதில் அதிக நாட்களை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்துள்ளனர்.
தங்களின் அனுபவத்தைக் கொண்டு சமுதாயத்திற்கு சேவையாற்ற அடுத்த கட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ளனர். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு நிறைய இருக்கிறது.
ஒற்றுமையான செயல்பாடு
பதவிக்காலம் முடிந்து இம்மன்றத்தை விட்டு விடைபெறும் தலைவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
இது போன்ற தருணங்களில், கட்சி எல்லைகளைக் கடந்து ஒற்றுமை உணர்வுடன் நாம் ஒன்றிணைகிறோம்.
அரசியலில் முற்றுப்புள்ளி இல்லை
அரசியலில் 'முற்றுப்புள்ளி' என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும்.
எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் அனுபவமும், பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
================