நிறைவு பெற்றது போராட்டம் : ”மக்கள் குரலுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்” : சோனம் வாங்சுக்..!

35 நாட்க்ளுக்கு மேலாக நிடித்து வந்த சிஜேபி கட்சியினரின் போராட்டமானது நிறைவுபெற்றதை அடுத்து சோனம் வாங்சுக் போராடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்ளை தெரிவித்தார்
Protest Concluded: Government Must Respect the People's Voice – Sonam Wangchuk.
Protest Concluded: Government Must Respect the People's Voice – Sonam Wangchuk.google
1 min read

மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் : சோனம்

டெல்லியில் 35 நாட்களாக போராடி வந்த மாணவர்களின் போராட்டமானது வெற்றியை எட்டிய நிலையில் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவர்கள் வெற்றி களிப்பில் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சிஜேபி சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு் அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார், இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மக்களின் குரலுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்

கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு , போராடிய மாணவர்களுக்கு வாழ்த்து

35 நாட்களுக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பாக நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்,

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு1 கோடி ரூ இழப்பீடு வழங்க வேண்டும் , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்க்கி பேரணியாக சென்றனர் .

மாணவர்களின் பேரணி, ஸ்தம்பித்த டெல்லி

நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர் இதனால் காவலர்கள் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் , தடியடி நடத்தினர்,

இதனால் போராடிய மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தாக்குதலானது தீவிரமானது.

மழைக்கால கூட்டத் தொடர் பாதிப்பு

மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்

இதனால் டெல்லியே பதற்ற சூழலில் ஸ்தம்பித்து போனது , குறிப்பாக போராட்டத்தின் எதிரொலியாக இணையதளம் மற்றும் முக்கிய மெட்ரோ நிலையங்களும் தற்கலிகமாக மூடப்பட்டன

ஜனநாயகம் வெல்லும், மாணவர்களுக்கு சோனம் வாங்சுக் வாழ்த்து

போராடி வென்ற அனைத்து மாணவர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வாழ்த்துகளை தெரிவித்துள்ளர் ,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனம் வாங்சுக் உடல் சீரான நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மரியாதை செலுத்தினார்.

பின்னர் 'மக்கள் குரலுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். போராட்டத்தில் வெற்றி பெற்ற இளைஞர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகள்' என்றும் தெரிவித்தார்

=============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in