”என்கவுண்டர் செய்யப்பட்ட பயங்கரவாதி லத்தீஃப் பட் ” : மசூதியில் இருந்து வெளியே வரவழைத்து வீழ்த்திய வீரர்கள்..!

காஷ்மீரில் பயங்கரவாதி லத்தீஃப் பட்-ஐ என்கவுண்டர் செய்த பாதுகாப்பு படையினர், வழிபாட்டு தலம் சேதம் அடையாமல் பொறுப்புடன் செயல்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
public expressed appreciation to  security forces, who acted responsibly, encounter terrorist Latif Butt
public expressed appreciation to security forces, who acted responsibly, encounter terrorist Latif Butt
2 min read

லஷ்கர் இ தொய்பா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு செயல்பட்டு வருகிறது. குல்காம் பகுதியில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் மசூதி ஒன்றில் பதுங்கியிருந்த ​​லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீஃப் பட் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

தளபதி லத்தீஃப் பட் சுட்டுக்கொலை

இவர் கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார்.

சரியாக ஓராண்டுக்குப் பிறகு, லஷ்கர் இ தொய்பாவில் சேர்ந்த அதே தேதியில் பயங்கரவாதி லத்தீஃப் கொல்லப்பட்டார்.

மசூதியில் பதுங்கி இருந்த லத்தீஃப்

பாதுகாப்பு படையினரால் தேடப்பட்டு வந்த இவருக்கு, பல பயங்கரவாதச் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பிருக்கிறது. சில மாதங்களாக இவரை தேடி வந்த நிலையில், மசூதியில் பதுங்கி இருந்த அவர் சுற்றி வளைக்கப்பட்டார்.

23 வயதான இவர் என்றும், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதிகளில் ஏ பிரிவில் உள்ளவர்கள், தீவிர தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்களின் மூளையாக இருப்பவர்கள். எனவே, இவர்களை பாதுகாப்பு படையினர் முக்கிய இலக்காக கருதி சுட்டு வீழ்த்துகின்றனர்.

மசூதியில் பதுங்கி இருந்த லத்தீஃப்

லத்தீஃப் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்த ராணுவத்தினர், அவரை சரண் அடையுமாறு அறிவறுத்தினர்.

ஆனால், அதற்கு லத்தீஃப். “நான் அல்லாவை சந்திக்க விரும்புகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் பதில் அளித்தார்.

லத்தீஃப் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, உளவு அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், மசூதியில் இருந்து வெளியே வர வரவழைக்கப்பட்ட அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது கூட்டளியான உமர் நிசார், குல்காமில் நடைபெற்ற நடவடிக்கையில் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்

கடந்த 11-ம் தேதி குல்காமின் அக்ரான் பகுதியில் லத்தீஃப் பட் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். உமர் நிசார் தார் என்பவருடன் இணைந்து இந்த தாக்குதலை லத்தீப் பட் நடத்தியதாக பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

ஜூலை மாதம் அனந்தநாக் மற்றும் குல்காமில் நடந்த இருவேறு தாக்குதல்களிலும் லத்தீப் பட்டுக்கு தொடர்பு இருந்தது.

லத்தீஃப் தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு

லத்தீப் பட் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்திருந்தது.

பாதுகாப்பு படைக்கு பெரிய வெற்றி

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், “நாங்கள் அவனுடன் தொலைபேசியில் பேசினோம். சரணடையுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவன் மறுத்துவிட்டான். அவன் மசூதிக்குள் பதுங்கி இருந்ததால் நாங்கள் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டோம்.

இது ஒரு பெரிய வெற்றி. அவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். அவன் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, காஷ்மீரின் அமைதி, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று வந்தான்.” என தெரிவித்தனர்.

வீரர்களுக்கு குவியும் பாராட்டு

வழிபாட்டு தலம் என்பதால், வீரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். லத்தீஃபை மசூதி வளாகத்தில் இருந்து வெளியே வரச் செய்து துல்லியமாக சுட்டுக்கொன்றனர்.

அமித் ஷா பாராட்டு

தீரமுடன் செயல்பட்ட படை வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். காஷ்மீரில் கடைசி உள்ளூர் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படும் லத்தீஃப் பட் என்கவுண்டர் செய்யப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

=========================