மினிமம் பேலன்சுக்கு அபராதம் : கைவிட பொதுத்துறை வங்கிகள் முடிவு

சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்சை பராமரிக்கா விட்டால், அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.
banks likely to remove minimum balance fines
Banks likely to Remove Minimum Balance Fines
1 min read

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் எப்போதும் மினிமம் பேலன்ஸ் தொகையை பராமரிக்க வேண்டும். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கியும் குறைந்த பட்ச இருப்பு தொகையை வாடிக்கையாளர்கள் பரமாரிக்க வேண்டும் என்பதில் கெடுபிடி காட்டுகின்றன.

மினிமம் பேலன்ஸ் - அபராதம் :

இதற்கு அபராதம் விதிக்கப்படுவதால், பொதுமக்கள் வங்கி கணக்குகளை ஜாக்கிரதையாக கையாள வேண்டிய சூழல் உள்ளது.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் சுமையாக உள்ளது.

தனியார் வங்கிகளில் அபராதம் கிடையாது :

ஆனால், தனியார் வங்கிகள் பெரும்பாலும், சம்பள கணக்குகள் மற்றும் பிக்சட் டிபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குக்கு, குறைந்தபட்ச இருப்பு வரம்பு விதிப்பது கிடையாது. எனவே, பொதுமக்கள் தனியார் வங்கிகளை நாடிச் செல்லும் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

அபராதம் - கைவிட வங்கிகள் முடிவு :

இதை கருத்தில் கொண்டு, மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட, பொதுத்துறை வங்கிகள் முடிவு எடுத்துள்ளன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன.

குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பதிலாக, டெபிட் கார்டு, ஏடிஎம்.மில் கூடுதல் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக, வருவாய் ஈட்ட பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in