புதுச்சேரி தேர்தல் : வாக்குச் சாவடியில் பூ கொடுத்து வரவேற்ற 'நிலா' ரோபோ! : பிங்க் பூத், விழிப்புணர்வு வாக்குச்சாவடி!

புதுச்சேரியில் வாக்கு செலுத்த வந்த பொதுமக்களை பூ கொடுத்து வரவேற்ற நிலா' என்ற ரோபோவும் ,பெண்கள் மட்டும் நிறைந்த பிங்க் வாக்குசாவடியும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டு இருந்தது.
Puducherry Election: 'Nila' robot at polling booth, pink booth, polling booths in awareness
Puducherry Election: 'Nila' robot at polling booth, pink booth, polling booths in awareness google
1 min read

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

புதுச்சேரிக்கு சட்டமன்ற தேர்தலானது இன்று நடைபெற்றது , 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 9.50 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்

இதற்காக 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்காளர்களை வரவேற்ற நிலா' ரோபோ

அந்தவகையில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை நிலா என்ற ' ரோபோ பூண்கிது குடுத்து வரவேற்றும் ,வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் அறிவுரைகளையும் வழங்கியது

பிங்க் வாக்குச்சாவடி

புதுச்சேரியில் இன்று நடைபெ்ற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி மாயம் ஒன்றில் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பெண்களாகவே இடம் பெற்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாகும்

கொண்டாட்டத்துடன் விழிப்புணர்வு

இந்த ஏற்பாடானது மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதர்க்காக இவ்வாறன ரோபோ வரவேற்பை அமைத்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோபோ வை உருவாக்கிய நிறுவனம்

இந்த நிலா ரோபோவை கோவையைச் சேர்ந்த 'ரோபோ மிரர்' என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கவுசிக் குறித்து கூறும்போது,

நிலா ரோபோ விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோதான் நிலா என்றும் ,திருமணங்கள், அரசு விழாக்கள் மற்றும் தேர்தல்கள் போன்ற தருணங்களில் பொதுமக்களுடன் உரையாடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆர்வமாக நிலா ரோபோவுடன் புகைப்படம்

ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து் கொண்ட பொதுமக்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in