புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு!

நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளார் நீதிபதி சுமதி.
Puducherry girl murder case: Death sentence announced for culprit
Puducherry girl murder case: Death sentence announced for culprit google
2 min read

தூக்கு தண்டனை அறிவிப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்குத் தண்டனையை போக்சோ நீதிமன்றம் நீதிபதி சுமதி இன்று அறிவித்துள்ளார்.

குற்ற பிண்ணனி

முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமான நிலையில் அவர் 2 நாட்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது.

குற்றவாளி என தீர்ப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் எற்க்கனவே தீர்ப்பளித்திருந்த நிலையில். குற்றத்திற்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது

குற்றம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்த சம்பவம் தொடர்பாக முத்​தி​யால்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, அதே பகு​தி​யைச் சேர்ந்த கருணாஸ் (19), விவே​கானந்​தன் (59) ஆகியோரை போக்சோ வழக்​கில் கைது செய்​தனர். இவ்​வழக்கு தொடர்​பாக 540 பக்க குற்​றப்​பத்​திரி​கையை போலீ​ஸார் தாக்​கல் செய்திருந்தனர்

விசாரணைக்கு வந்த வழக்கு

இந்த குற்றம் தொடர்பாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவே​கானந்​தன் கடந்​த 2024 செப்​டம்​பரில் கழி​வறை​யில் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இந்த நிலையில் தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது.

தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்து

அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், குழந்தையை அடைத்து வைத்தல், கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பாக பேசிய அவர்

கடந்த 2024 நவம்பரில் சாட்சி விசாரணை தொடங்கியது நிலையில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.குற்றம் சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால்

அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தாகவும் அவர் தெரிவித்தார்

விசாரணை முடிந்த நிலையில் கடந்த 30-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குற்றவாளி எனத் தீர்ப்பு

அன்றைய தினம் இந்திய தண்டனை சட்டம் 366-வது பிரிவில் பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், 342-வது பிரிவில் குழந்தையை அடைத்து வைத்தல், 302-வது பிரிவான கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிப்பு

இவ்வழக்கில் மரணத்தண்டனைக்கான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கிறது. அரிதினும் அரிதான வழக்கு என உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு தரப்பு, எதிர்தரப்பு விவாதங்களுக்கு பிறகு தண்டனை விவரம் மே 5ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி சுமதி குறிப்பிட்டிருந்த நிலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in