

பொங்கல் தொகுப்பு - பரிசு
Puducherry govt will disburse Rs 750 worth Pongal gift to all ration card holders, CM Rangasamy announced : அண்டை மாநிலமான புதுச்சேரி அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்து வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அறிவித்து இருக்கிறது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
பச்சரிசி, நாட்டு சர்க்கரை
பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசி பருப்பு, நெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகிய பொருள்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.3 முதல் விநியோகம்
ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
பொங்கல் பணம் - தகவல் இல்லை
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொங்கல் தொகுப்பில் பரிசாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.
கடந்த ஆண்டு புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுக்கான தொகை ரூ.750 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.
====