போராட்டத்தை முன்னெடுக்கும் ராகுல் காந்தி : ”தேர்வு முறைகேடு, வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக மாநாடு” : அறிவிப்பு

தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக ராகுல் காந்தி, மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்ட இயக்கத்தை முன்னெடுக்க உள்ளார்.
Rahul Gandhi announced spearhead a protest movement , focusing  issues examination irregularities and unemployment.
Rahul Gandhi announced spearhead a protest movement , focusing issues examination irregularities and unemployment. google
2 min read

தொடர்ந்து நீடிக்கும் தேர்வு குளறுப்படி , வேலைவாய்பின்மை அவலநிலை

வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வானது ரத்து செய்யப்பட்டது , அதனை தொடர்ந்து கியூட் நுழைவு தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றது , இது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

அதேபோலவே நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனை முதன்மையாக கொண்டு இயக்க போரட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்

ஜூன் 17ல் இயக்கம் முன்னெடுப்பு

எனவே, வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மைஆகியவற்றுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களைத் திரட்டி ஜூன் 17 முதல் மிகப்பெரிய இயக்கத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாநாடு

ராகும் முன்னெடுத்திருக்கும் இந்த மாநாடானது , நீட் தேர்வு பயிற்சி மையம் அதிகமுள்ள இடங்களிலே முதன்மையாக நடைப்பெறும் என்றும் , அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜூன் 17-ல் முதல் மாணவர் மாநாடும் , அதனை தொடர்ந்து

ஜூலை 10ல் அலகாபாத் (பிரயாக்ராஜ்) மாநாடு

ஜூலை 11 - பிகார் மாநிலம் பாட்னா,ஜூலை 14 - தேசியத் தலைநகர் தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் மிகப்பெரிய மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

"காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வழிகாட்டுதலின் கீழும், ராகுல் காந்தியின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழும், கேள்வித்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் இந்திய இளைஞர்களை மோடி அரசு முறையாக ஏமாற்றி வரும் நிலைக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறவுள்ள முதல் கட்டப் போராட்ட இயக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக மிகவும் தொடர்ந்து, நம்பகத்தன்மையுடன் குரல் கொடுத்து வரும் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் காந்தி, மாணவர்களுக்கான மாபெரும் மாநாடுகளை நடத்த உள்ளார்.

இம்மாநாடுகள் கோட்டாவில் (ஜூன் 17) அலகாபாத்தில் (ஜூலை 10), பாட்னாவில் (ஜூலை 11) மற்றும் தில்லியில் (ஜூலை 14) நடைபெறவுள்ளன.

இதற்காக தேசிய மாணவர் சங்கம், இந்திய இளைஞர் காங்கிரஸ், மாநில காங்கிரஸ் கமிட்டிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மூலமாக விரிவான மக்கள் சேர்க்கைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களின் கனவு , அரசியல் அலட்சியத்தால் பலியாக்கூடாது

நேரடி மற்றும் டிஜிட்டல் அழைப்புகள், கல்லூரி வளாகப் பிரசாரங்கள், பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் கலந்துரையாடல்கள், சமூக ஊடக இயக்கங்கள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் மாணவர்களுடன் நேரடி தொடர்புகள் ஆகியவை மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும்.

இந்திய இளைஞர்களின் கனவுகளும் ஆசைகளும் ஊழல், திறமையின்மை அல்லது அரசியல் அலட்சியத்தால் பலியாகக் கூடாது என்ற ராகுல் காந்தியின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில்,

இந்த இயக்கம் அரசியல் சார்புகளைத் தாண்டி மாணவர்களை ஒன்றிணைத்து, தேர்வு முறைகேடுகள் மற்றும் கேள்வித்தாள் கசிவு விவகாரங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் நடைபெறும் இத்தகைய தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்தவும் ஒரு தளத்தை உருவாக்கும். என்றும்

இந்த இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கைகள் .

நீட் தேர்வை மையமற்ற முறையில் நடத்துதல்

தேர்வுக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்தல்

கேள்வித்தாள் கசிவு கும்பல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது

அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை பொறுப்பேற்கச் செய்வது

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதற்கான கோரிக்கை

இந்த பிரச்னைகளை தொடர்ந்து எழுப்பி வந்துள்ள ராகுல் காந்தி, திறமை, நியாயம் மற்றும் இளைஞர்களுக்கான சம வாய்ப்புகளைப் பாதுகாப்பதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசரமான பிரச்சினையாக மாற்றியுள்ளார்.

என்று இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in