மக்களவை விதிகளை மீறினாரா ராகுல் : கடும் விமர்சனம்

Congress MP Rahul Gandhi break the Parliament rules : ராகுல் காந்தி கைலாஷ் மலைப்பகுதியில் சீன ஊடுருவல் குறித்து மக்களவையில் பேச முயன்ற போது, கடும் அமளி ஏற்பட்டது.
Congress MP Rahul Gandhi break the rules in Parliament
Congress MP Rahul Gandhi break the rules in ParliamentSource : SANSAD TV
1 min read

அமளிக்கு காரணம் என்ன

Congress MP Rahul Gandhi break the Parliament rules : இந்​திய - சீன மோதலின்​ போது, சீனா​வின் டாங்குகள் இந்​திய எல்​லைக்​குள் நுழைந்​த​தாக முன்​னாள் ராணுவத் தளபதி நரவனே தனது நூலில் கூறி​யுள்​ள​தாக ராகுல் காந்தி கூறியதை அடுத்​து, மக்​களவை​யில் கடும் அமளி ஏற்​பட்​டது.

ராகுல் குறிப்பிட்டு பேசியது என்ன

டோக்​லாமில் ஒரு முகட்டை கைப்​பற்ற 4 சீன டாங்​கு​கள் நுழைந்​த​தாக முன்​னாள் ராணுவத் தளபதி எம்​.எம்​.நர​வனே தனது நூலில் கூறி​யுள்​ள​தாக ராகுல் குறிப்​பிட்​டார்.

அனுமதியில்லாத பேச்சுக்கு எதிர்ப்பு

இதற்கு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங், “இந்​தப் புத்​தகம் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்லை என்​ப​தால் அதன் அடிப்​படை​யில் ராகுல் பேச முடி​யாது” என்​றார்.

உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் இதே கருத்தை வலி​யுறுத்​தி​னார்.ஓம் பிர்​லா​வும், பின்​னர் நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு​வும் எதிப்பை தெரிவித்தனர் .

ஓம் பிர்லா எதிர்ப்பு

ஒரு புத்​தகத்​தில் இருந்து அவ்​வாறு மேற்​கோள் காட்​டு​வதற்கு எதி​ரான அவை விதி​களைக் குறிப்பிட்டனர். அது வெளி​யிடப்​பட்​டிருந்​தா​லும் கூட, அவை​யின் நடவடிக்கைகளு​டன் தொடர்​பில்​லாத எந்​தவொரு புத்​தகத்​தில் இருந்​தும் மேற்​கோள் காட்​டு​வது அனு​ம​திக்​கப்​ப​டாது என ஓம் பிர்லா கூறினார்.

மக்களவை விதி கூறுவது என்ன

நாடாளு​மன்ற அலு​வலக வட்​டாரம் கூறுகை​யில், ‘மக்களவை எம்​.பி. தனது பேச்​சில் ஒரு புத்​தகம், செய்​தித்​தாள் அல்​லது கடிதத்​தில் இருந்து மேற்​கோள் காட்​டு​வது, அவை​யின் நடவடிக்​கைகளுக்​குத் தொடர்​புடைய​தாக இருந்​தாலன்​றி, தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இதை மக்​களவை விதி 349(I) குறிப்​பிடு​கிறது.

சபாநாயகர் அனுமதியை பெறவில்லை

இவ்வாறு செய்​வதற்கு முன்பு சில விதி​களை அந்த எம்​.பி. பின்​பற்​று​வது மிக​வும் முக்​கி​யம். இந்த விதி​யின்​படி அந்த எம்​பி, தனது உரைக்கு முன்​பாக சபா​நாயகரின் அனு​மதி பெற வேண்டும். ஏனெனில், இந்த விதியை மீறும் எம்​.பி. தனது பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவிக்​கின்​றனர்.

ராகுல் பேசியதற்கு நடவடிக்கையா?

சபா​நாயகரின் அனு​மதி பெறாதது மட்​டுமின்​றி, ராகுல் காந்தி குறிப்​பிட்ட நூலானது இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. ராகுலின் இந்த நடவடிக்கை நாடாளு​மன்​றக் குழு​வின் விசா​ரணைக்கு உகந்​த​தாக கருதப்​படு​கிறது.

எனவே, ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து சபா​நாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோ​சனை செய்து வரு​வ​தாக​வும் தெரி​கிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in