ராகுல் மேற்கோள்காட்டிய புத்தகம்
Rahul Gandhi Parliament Speech : முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் FOUR STARS OF DESTINY என்ற புத்தகம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த புத்தகத்தின் பிரதிகளைக் காண்பித்து, நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்ராகுல் காந்தி, இந்திய-சீனா எல்லை மோதல் குறித்து சரமாரி புகார்களை முன்வைத்து இருந்தார் .
வழக்குப்பதிவு
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனேவின் வெளியாகாத சுயசரிதை புத்தகம் இணையதளத்தில் கசிந்தது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
வெளிவராத புத்தகம் விசாரணை
அவர் நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய நூல் இன்னும் வெளிவராத சூழலில் ராகுல் எப்படி அதனை மேற்கோளாக காட்டினார் என்பதே புரியாத புதிராக உள்ளது. கையெழுத்துப் பிரதிகூட இல்லாமல் ஒரு புத்தகம் எப்படி வெளிவந்தது என்ற கேள்வியும் எழும்பியுள்ளது .
அச்சுப் பிரதி அமைச்சகத்தின்அனுமதி
ஒரு புத்தகம் வெளிவர ஒரிஜினல் அச்சுப் பிரதி பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) அனுமதியை பெற வேண்டும் . ஓய்வுபெற்ற உயர் ராணுவ அதிகாரிகள், தங்களின் அனுபவங்களை புத்தகமாக எழுதும்போது, அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறவேண்டும்.
இந்த புத்தகத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், டெல்லி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பதிப்பகத்தின் விளக்கம்
முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே எழுதியதாக கூறப்படும்‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’நினைவுக் குறிப்பு புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை என Penguin பதிப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
எச்சரிக்கை
மேலும் இந்த புத்தகம் இன்னும் எந்த டிஜிட்டல் தளங்களிலும் பதிவேற்றம் செய்யபடவில்லை என்றும் அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை பதிவேற்றம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேக்கொள்ளப்படும் என்றும் அது பதிப்புரிமை மீறலாக கருதப்படும் என்றும் எச்சரித்துள்ளது .
இராணுவத் தலைவர்களின் நூல் ,பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல்
இராணுவத் தலைவர்களால் எழுதப்படும் புத்தகங்களுக்கு பலவேறு தரப்பு மக்களாலும் வரவேற்பு அளிக்கப்படுவது இயல்பான ஒன்றாகும் ,அவர்கள் போர் சூழலில் மேற்கொண்ட ,எதிர்கொண்ட அனைத்தையும் உண்மை சம்பவமாக தங்களின் நூலில் குறிப்பிடுவர் . அந்த நூல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே வெளியிடப்படும் .
அந்த வகையில், ஜெனரல் நாரவனேவின் புத்தகமான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி ஒரு விதிவிலக்கான புத்தகமாகும். 2020 மற்றும் 2024க்கு இடையில் பாதுகாப்பு அமைச்சகம் 35 புத்தகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது, மேலும் ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி என்ற ஒரே கையெழுத்துப் பிரதி இன்னும் நிலுவையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்திய ராணுவ சட்டம் கூறுவது
இந்தியாவில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் புத்தகங்களை வெளியிடுவதில் இராணுவச் சட்டம், 1950 எந்த வித தடையையும் விதிப்பதில்லை மாறாக இச்சட்டம் வீரர்களுக்கே பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறது .