பிரதமர் மோடி, அஜித் தோவல் குறித்து ராகுல் சர்ச்சை கருத்து : பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி பதிலடி...!

இந்தூரில் நடைபெற்ற ‘Chhatron Ki Goonj’ நிகழ்ச்சியில் அஜித் தோவல் போன் ஒட்டுக்கேட்பதாக குற்றச்சாட்டு; பிரதமர் மோடி குறித்த கருத்துகளுக்கும் எதிர்ப்பு ...
Rahul Gandhi’s Remarks on PM Modi and Ajit Doval Trigger BJP Backlash
Rahul Gandhi’s Remarks on PM Modi and Ajit Doval Trigger BJP BacklashAi Generated
1 min read

இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சர்ச்சை பேச்சு :

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கருத்துகள் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் குறித்து அவர் பேசியதாக கூறப்படும் கருத்துகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி கூறியது என்ன?

நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் நிர்வாக அமைப்பை விமர்சித்ததுடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட சிலர் நாட்டின் "சிஸ்டத்தை" இயக்குவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், அஜித் தோவல் தொலைபேசி மற்றும் சமூக வலைதள தகவல்களை கண்காணிப்பதாகவும், அந்த தகவல்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் செல்கின்றன என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு :

ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் உயரிய பதவிகளில் இருப்பவர்கள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பொறுப்பற்ற அரசியல் என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் சர்ச்சையான நிகழ்வு :

அதே நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை நையாண்டி செய்து நடத்தப்பட்ட காமெடி நிகழ்ச்சியும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ள நிலையில், இது சாதாரண நகைச்சுவை நிகழ்ச்சி மட்டுமே என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

தீவிரமடையும் அரசியல் மோதல் :

ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் அதற்கு பாஜக அளித்த பதிலடி காரணமாக, தேசிய அரசியலில் காங்கிரஸ் - பாஜக இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் பாஜக சாராத அரசியல் கட்சி தலைவர்களும் சரி பொது மக்களும் சேரி இந்த பேச்சுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள் .

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in