ரயில்வே சட்ட விதிமுறையில் மாற்றம் : ”ஜன் விசுவாச சட்டம் 2026 கீழ் நடவடிக்கை” : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

ஒன்றிய அரசின் புதிய ஜன் விசுவாச சட்டம் 2026 அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்வே சட்ட விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன
Railway administration announces changes railway regulations after 13 years
Railway administration announces changes railway regulations after 13 years google
1 min read

புதிய திருத்த சட்டம் : ஜுலை 1 முதல் அமல்

மத்திய அரசின் புதிய ஜன் விசுவாச சட்டம் 2026 நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்வே சட்ட விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாற்றங்கள் ஜூலை 1ஆம் தேதி அன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது

ரயில்வே துறையின் சில முக்கிய மாற்றங்கள்

13 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே துறையில் சில முக்கிய மாற்றங்க கொண்டுவரப்பட்டுள்ளது , அதன்படி

டிக்கெட் இல்லாமல் பயணித்தால், இரு மடங்கு அபராத கட்டணம்

புதிய ரயில்வே விதிமுறைகளின் படி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு 500 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று புதிய அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளது

அதாவது டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பட்சத்தில் தூரத்திற்கான ரயில் கட்டணத்தோடு அபராத தொகையாக ரூ.500 வசூலிக்கப்படும்.

பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்தால், ஐந்து மடங்கு அபராத கட்டணம்

பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் பயணம் செய்தால் வசூலிக்கப்படும் அபராத தொகை ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு 2500 ரூபாயாக வசூலிக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆண் பயணியை உடனடியாக ரயிலில் இந்த புதிய சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது

வேறொருவர் டிக்கெட்டில் பயணம் செய்தாலும் கூடுதல் அபராதம்

அதனப்படி , வேறொருவரின் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி பயணிக்கும் பட்டசத்தில் , அந்த டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதுடன் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்ரு குறிப்பிட்டுள்ளது .

ரயில்களில் வியாபாரம், யாசகம் எடுத்தால் அபராதம்

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் யாசகம் எடுப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே தவறை மீண்டும் செய்தால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்வதற்கும் தடை, மீறினால் நடவடிக்கை

ரயில்களில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் அல்லது எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களாஇ எடுத்து செல்ல நேர்ந்தால் ,அதற்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in