Indian Railway : ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் கூடுதல் அபராதம் : ரூ. 500 ஆக உயர்வு : தவறினால் 6 மாதம் சிறை...!

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் விதிக்கப்படும் அபராத தொகையை 250ல் இருந்து 500 ரூபாயாக ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
 railway administration has raised the fine for ticketless travel on trains from ₹250 to ₹500
railway administration has raised the fine for ticketless travel on trains from ₹250 to ₹500google
1 min read

இந்திய ரயில்வே

உலகளவில் பொதுப் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிப்பது இந்திய ரயில்வே. நாள்தோறும் ஆயிரக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

உலகிலேயே பொதுத்துறையில் அதிகம் பேர் பணியாற்றுகிற ஒரு துறையாகவும் இந்திய ரயில்வே திகழ்ந்து வருகிறது.

முறைகேடுகளை தடுக்க அபராதம்

ஜனவிஸ்வாஸ் சட்டத்தின் பிரிவு 137 மற்றும் 138-ன் கீழ் ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் இதுவரை 250 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

அங்கீகரிக்கப்படாத, டிக்கெட் இல்லாத பயணத்தைக் கட்டுப்படுத்தவும், ரயில் சேவைகளைச் சீராக நடத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கபடுகிறது.

இதை மேலும் வலுவாக்கும் போருட்டு அபராத தொகையை ரூ.250-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

முறையான டிக்கெட் அவசியம்

பயணிகளின் வசதிக்காகவும், அபராதங்களைத் தவிர்க்கவும் முறையான டிக்கெட்டுடன் பயணம் செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால்?

ரயில்வே நிர்வாகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன், உரிய அனுமதியின்றி அல்லது டிக்கெட் இன்றி ரயில் பெட்டியில் நுழைவது அல்லது பயணம் செய்வது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டிக்கெட் அல்லது பாஸை மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பது.

போன்ற காரணங்களுக்காக அபராதம் வசூலிக்கப்படுகிறது. பயணம் செய்த தூரத்திற்கான கட்டணம். பயணக் கட்டணத்திற்குச் சமமான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இது தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

6 மாத சிறைத் தண்டனை

கட்டணம் செலுத்தத் தவறினால் ரயில்வே அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டணம் செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 வரை அபராதம் அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படும்.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in