இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது
Railway Minister Ashwini Vaishnav on Electric Train : நாட்டின் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளில் ரயில் போக்குவது சேவையானது முக்கிய இடம் பெறுகிறது என்று தெரிவித்த அமைச்சர்
ரயில்களை இயக்குவதற்கு டீசலிலிருந்து மின்சக்திக்கு மாறியதன் மூலம், இந்திய ரயில்வே 6,000 கோடி ரூபாயைச் சேமித்திருப்பதாக தெரிவித்துள்ளார்
மின்சார ரயில்கள் முக்கிய பயன்பாடு
கடந்த பாஜக ஆட்சியில் 35,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்ட்டுள்ளதாகவும் 27,000 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
மேலும் இந்திய ரயில்வேயின் செலவினங்களில் ஊழியர்களுக்கான ஊதியமே மிகப்பெரிய பங்காக முக்கியம் வகிக்கிறது .
அதற்கு அடுத்தபடியாக எரிசக்திச் செலவு இரண்டாவது மிகப்பெரிய செலவினமாக இருப்பதால் , ரயில்களின் இயக்கத்தி முழுமையாக மின்சார முறையில் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்
இதற்கான நிதி ஒதிக்கீடு
ஒரு தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய முடிவாக, ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைக்க பிரதமர் மோடி முடிவெடுத்தார்.
இதன் விளைவாக ரயில்வே அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்
விவாதத்தின் இறுதியில், 2026-27 நிதியாண்டிற்கான ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகளை லோக்சபா ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.