ரயில் பாதையில் " Solar Panels" : இந்திய ரயில்வே புதிய சாதனை

Solar Panels on Railway Tracks in India : நாட்டிலேயே முதல் முறையாக ரயில் பாதையில் 'சோலார் பேனல்களை” அமைத்து, ரயில்வேத்துறை சாதித்து வருகிறது.
India's first 70m Removable solar panels system between railway tracks in Varanasi
India's first 70m Removable solar panels system between railway tracks in Varanasi
1 min read

இந்திய ரயில்வேத்துறை :

Solar Panels on Railway Tracks in India : உலக அளவில் அதிக மக்களவை அழைத்து செல்லும் மிகப்பெரிய சேவையை இந்திய ரயில்வே ஆற்றி வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு, லட்சக் கணக்கானோர் இவற்றில் பயணிக்கின்றனர். பெரும்பாலான வழித் தடங்கள் மின்மயமாக்கப்பட்டு, மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சூரிய சக்தி மின்சாரம் :

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இந்திய ரயில்வே தனக்கு சொந்தமான இடங்களில் சூரியசக்தி(Solar Energy), காற்றாலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் தனியார் பங்களிப்போடு சோலார் பேனல்களை(Solar Panels Installation) நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரயில் பாதைகளில் சோலார் பேனல்கள் :

அடுத்த கட்டமாக ரயில் பாதைகளில் அதாவது, தண்டவாளங்களுக்கு இடையே சூரிய மின் தகடுகளை பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை ரயில்வே கையிலெடுத்து உள்ளது. அதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே நிலையம்(Varanasi Railway Station Solar Panels) அருகே, 'கோமோமோட்டிவ் ஒர்க்ஸ்' சார்பில், 70 மீட்டர் துாரத்துக்கு, 28 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் சோலார் பேனல்கள் :

இதிலிருந்து, நாள்தோறும் 15 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப அகற்றவும், மாற்றவும் கூடிய வகையில் சோலார் பேனல்கள்(Removable Solar Panels) வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் திட்டம் வெற்றி பெற்று இருப்பதை தொடர்ந்து, படிப்படியாக நாடு முழுவதும் ரயில் பாதைகளில் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன்படி மின்சாரம் தயாரிக்கப்பட்டால், ரயில்வே துறைக்கு தேவையான அளவு மின்சாரம் கிடைக்கும் என்று தெரிகிறது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in