

இந்திய ரயில்வேயின் பயணம்
நிலக்கரியில் தொடங்கிய இந்திய ரயில்வேயின் பயணம் மின்சாரம் வரை வந்து இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு 100 சதவீதம் பாதிப்பை தராத ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்கள் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் ரயில் பெட்டிகளின் (Trainset) அறிமுகத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.
டெல்லி கோட்டத்தில் இயக்கம்
வடக்கு ரயில்வேயின் டெல்லி கோட்டத்திற்கு உட்பட்ட ஜிந்த் - சோனிபட் (Jind-Sonipat) வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் (75 kmph) வேகத்தில் இயக்கப்படும்.
10 பெட்டிகளைக் கொண்ட, 1200 கிலோவாட் (KW) திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் (Hydrogen Fuel Cell) அடிப்படையிலான 'DEMU' ரயில் பெட்டிகள் இயக்கப்படும்.
சோதனை ஓட்டங்கள் வெற்றி
ஹைட்ரஜன் ரயிலுக்கான முதற்கட்ட சோதனை ஓட்டங்கள் மார்ச் மாதமே வெற்றிகரமாக முடிவடைந்தன. ஆர்.டி.எஸ்.ஓ (RDSO) ரயிலின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்தச் சோதனையை நடத்தியது.
எலைட் பட்டியலில் இந்தியா
இந்த ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியான மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, உலக அளவில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஒரு சில முன்னணி நாடுகளின் எலைட் (Elite) பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.
ரயிலின் சிறப்பு அம்சங்கள்
ஹைட்ரஜன் ரயிலில் தலா 1200 kW திறன் கொண்ட இரண்டு 'டிரைவிங் பவர் கார்கள்' (Driving Power Cars - DPCs) உள்ளன. இதன் மொத்த திறன் 2400 kW ஆகும். இவற்றுடன் பயணிகள் பயணிக்கும் 8 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கும்.
நச்சு வாயுக்களை வெளியிடாது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Zero Pollution): இந்த ரயிலில் இருந்து கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற நச்சு வாயுக்கள் எதுவும் வெளியாகாது. முற்றிலும் பூஜ்ஜிய உமிழ்வு (Zero Emission) கொண்டது.
இதன் புகைக்குழாய் வழியே தூய்மையான நீராவி (Water Vapour) மட்டுமே வெளியேறும். இதனால் சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் பாதுகாக்கப்படுகிறது.
வடக்கு ரயில்வேயை தொடர்ந்து மற்ற ரயில் கோட்டங்களிலும் எதிர்காலத்தில் நைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
=====================