அரசியல் அமைப்புகள் மீது ராகுல் குற்றச்சாட்டு : ராஜ்நாத் பதிலடி

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அரசியல் அமைப்புகள் மீது ராகுல் குற்றம் சாட்டி வருவதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
Rajnath Singh condemned Rahul for making accusations against political organisations without any basis
Rajnath Singh condemned Rahul for making accusations against political organisations without any basis
1 min read

ராகுலுக்கு என்ன ஆச்சு?

Rajnath Singh condemns Rahul Gandhi for ‘dragging Indian Army into politics’ : பிகாரில் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், “ ராகுல் காந்திக்கு என்ன ஆயிற்று? அவர் பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகிறார். பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு கோரி அவர் நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். நமது படைகள் இவை அனைத்திற்கும் மேலானவை.

நாட்டை ஆள்வது விளையாட்டு கிடையாது

நாட்டை நடத்துவது குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்துகொள்ள வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டுள்ளது. முடிவுபெறவில்லை. பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவைத் தாக்க முயன்றால், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம். இந்தியா யாரையும் தூண்டவில்லை, ஆனால் யாராவது நம்மைத் தூண்டினால், நாங்கள் அவர்களை விடமாட்டோம்.

அடிப்படை இல்லாமல் குற்றம்சாட்டுவதா?

ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளை எந்த அடிப்படையும் இல்லாமல் குறிவைக்கிறார். தனது கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்பது அவருக்குத் தெரியும். பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தெளிவான அலை உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அடுத்த அரசை அமைப்பது உறுதி” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in