

ரக்ஷா பந்தன் வரலாறு :
ரக்ஷா பந்தன் என்பது சகோதரன் சகோதரியின் அன்பு, பாசம் மற்றும் பாதுகாப்பு உணர்வை கொண்டாடும் முக்கியமான இந்து திருவிழாவாகும்.
ரக்ஷா” என்றால் பாதுகாப்பு, “பந்தன்” என்றால் பிணைப்பு அல்லது உறவு என்று பொருள்.
இந்தப் பண்டிகையின் வேர்கள் பண்டைய இந்திய மரபுகளிலும், இந்து சமய வழக்கங்களிலும் காணப்படுகின்றன.
வேத காலத்தில் யாகங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது பாதுகாப்பைக் குறிக்கும் “ரக்ஷா சூத்திரம்” என்ற புனித நூல் கையில் கட்டும் வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது
நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து :
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சகோதர சகோதரிகளுக்கு இடையே உறுதியான நம்பிக்கை, அன்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், சகோதரிகள் தங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துகளின் அடையாளமாகத் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் வண்ணமயமான நூல்களை அல்லது 'ராக்கி'களைக் கட்டுகிறார்கள்.
அதற்குப் பதிலாகச் சகோதரர்கள் அன்பான பரிசுகளை அளிப்பதோடு, எத்தகைய சூழ்நிலையிலும் அவர்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார்கள்.
சகோதர-சகோதரிக்கு இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் பண்டிகை :
ரக்ஷா பந்தன் விழா சகோதர-சகோதரிக்கு இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும்.
நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறது. அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்நாளில் நாட்டுமக்களுக்கு எனது வாழ்த்துகள்.
இந்த மங்களகரமான பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைத் தரட்டும்.
அன்பு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் பிணைப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று மோடி இந்தியில் பதிவிட்டுள்ளார்.