புனித ரமலான் : நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்கள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

Ramadan 2026 : இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானுக்கான நோன்பு இன்று நாடு முழுவதும் தொடங்கியது.
Ramadan 2026 Fasting for the holy month of Ramadan began across the country in India today
Ramadan 2026 Fasting for the holy month of Ramadan began across the country in India todaygoogle
1 min read

பிறை பார்த்து நோன்பு தொடங்கப்பட்டது

Ramadan 2026 : ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வெற்றிகரமாக அதனை முடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பது பார்க்கப்படுகிறது .அந்த வகையில் இஸ்லாமிய மாதமான ரம்ஜான் மாத பிறை பார்த்து நோன்பு தொடங்குவது இயல்பான வழக்கமாகும்

அதிகாரபூர்வ நோன்பு அறிவிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் ரம்ஜான் பிறையானது நேற்று இரவு காணப்பட்ட நிலையில் தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹியித்தின் நோன்பை அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

அன்பார்ந்த இஸ்லாமியப் பெருமக்களே. அஸ்ஸலாமு அலைக்கும். 18-02-2026 மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான்(Ramadan 2026 Start Date in Tamil) மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டதை அடுத்து (இன்று , 19-02-2026) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாகத் தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தின் பாகவி. மழாஹிரி காஸிமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தார் .

ரமலான் வாழ்த்துடன் அறிக்கை

இரவு முதல் பள்ளிவாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். எனவே இந்த நிலையில் இறை அருளும் அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுகிறோம் என்றும் அனைவருக்கும் எங்களது கனிவான ரமலான் முபாரக் நல்வாழ்த்துகள் என்று அறிக்கையில் தெரிவித்தனர் .

logo
Thamizh Alai
www.thamizhalai.in