’ராமதாஸ் பொதுக்குழு’ அதிகாரமில்லை : மல்லுகட்டும் அன்புமணி தரப்பு

Ramadoss vs Anbumani Clash Update : ராமதாஸ் நடத்தும் பாமக பொதுக்குழுவுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது.
Ramadoss vs Anbumani Clash Update
Ramadoss vs Anbumani Clash Update
1 min read

யார் கையில் பாமக! உச்சக்கட்ட குழப்பம் :

Ramadoss vs Anbumani Clash Update : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் - அன்புமணி மோதல் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இருவரும் தாங்கள்தான் உண்மையான பாமக, தங்களுக்கே அதிகாரம் என்று கூறி வருகிறார்கள்.

அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு :

இந்தநிலையில், கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுவை(PMK General Body Meeting) நடத்திய அன்புமணி, பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். அதில் முக்கியமானது பாமக தலைவராக அவரது பதவி 2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது தான்.

தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார் :

இதையடுத்து 11ம் தேதி பூம்புகாரில் ராமதாஸ் தலைமையில் பாமக மகளிர் மாநாடு(PMK Magalir Manadu) நடைதெற்றது. இதில் தந்தையை மிஞ்சிய தனயன் கூடாது என்று அன்புமணியை ராமதாஸ் கண்டித்தார். மேலும்,

அன்புமணி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என கூறி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் ராமதாஸ் அனுப்பி இருக்கிறார்.

அன்புமணியை உண்மையான பாமக :

இதுபற்றி விளக்கம் அளித்த அன்புமணி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, ”அன்புமணி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு என்பது சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டது ஆகும். கட்சியின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு நடத்தப்பட்ட பொதுக்குழு, 100 சதவீதம் சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஏறக்குறைய 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அன்புமணிக்கே முழு அதிகாரம் :

9ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு தான் சட்டப்பூர்வ பொதுக்குழு. அதற்கு பிறகு 17 ஆம் தேதியிலோ, வேறு தேதியிலோ நடத்தப்பட்டால் அது பொதுக்குழுவே கிடையாது. சட்டப்பூர்வ பொதுக்குழு கிடையாது. பொதுக்குழுவை கூட்டவோ, தலைமை தாங்குவதற்கோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதில் கட்சி விதிகள் தெளிவாக சொல்கிறது. பாமக நிறுவனர் சார்பில் ஒரு புகார் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இது வருத்தமளிக்கிறது.

மேலும் படிக்க : PMK : ராமதாஸ் VS அன்புமணி : சமரசத்திற்கு இன்னும் காலம் ஆகலாம்

பொதுக்குழு - தலைவருக்கே அதிகாரம் :

பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. கூட்டத்திற்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும், அவரது வழிகாட்டுதலின்படிதான் கூட்டத்தை நடத்த வேண்டும் என பாமகவின் விதி 13-ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனர் அனுமதியோடு தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடவில்லை” இவ்வாறு வழக்கறிஞர் பாலு(PMK Advocate Balu) தெரிவித்தார்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in