
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு
US’ 50% tariffs ‘Not a matter of huge concern’, RBI chief Sanjay Malhotra Clarified : ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்குள்ள வணிக நிறுவனங்களில் இந்திய பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பில்லை
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பங்கேற்று பேசினார். ” உலகப் பொருளாதாரத்தில் பல சவால்கள் இருந்தும், இந்தியா கடந்த ஆண்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் எட்டி இருக்கிறது. இந்தியா பெரும்பாலும் உள்நாட்டு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால், சர்வதேச நிலவரங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.
50% வரி - பெரிய பாதிப்பில்லை
எனவே, வெளிநாட்டு (அமெரிக்காவின் 50% வரி) வரிவிதிப்பு நடவடிக்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச வர்த்தகம் சீர்குலைந்ததுடன், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளோம்.
கட்டுக்குள் பணவீக்கம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அதன் சதவீதம் 8 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைத்திருப்பது, 8 ஆண்டுகளில் இல்லாத ஒன்று. மத்திய அரசு மற்றும் நிதிக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படுவதே இதற்கு முக்கிய காரணம்
ரூபாயின் மதிப்பு சரியவில்லை
அமெரிக்க டாலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பு, மற்ற நாடுகளின் கரன்சியைப் போல் அதிகம் மதிப்பிழக்கவில்லை. எனவே, இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்திக்க வாய்ப்பே இல்லை. சிறிய, சிறிய சவால்கள் படிப்படியாக சரி செய்யப்பட்டு விடும்” இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
==================