

நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு
NHAI Jio Launch Mobile Safety Alert : இன்று நாடு முழுவதும் 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகள் விரைவான பயணத்திற்கு வழி வகுக்கின்றன. அதேசமயம், விரைவான போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரிய சேதத்தை விளைவித்து விடுகின்றன.
பாதுகாப்பு ஒப்பந்தம்
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து வரும் NHAI மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து, மொபைல் அடிப்படையிலான சாலை பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
ஜியோ அளிக்கும் சேவை
ஜியோவின் 4G-5G நெட்வொர்க்கை பயன்படுத்துவோருக்கு தனியாக சாலையோர சாதனங்கள் தேவை இல்லை. முழுக்க தானியங்கி முறையில், NHAI-யின் “ராஜமார்க் யாத்திரை” ஆப் மற்றும் அவசர ஹெல்ப்லைன் 1033 ஆகியவற்றுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், வருங்காலத்தில் இந்தியாவின் சாலை பாதுகாப்பு மிகச் சிறந்த ஒன்றாக மாறிவிடும்.
மொபைல் அலர்ட் சிஸ்டம்
இந்தமுறை செயல்பாட்டிற்கு வந்ததும், ஜியோ பயனர்களுக்கு பயணத்தின் போது நேரடியாக பாதுகாப்பு எச்சரிக்கைகள் கிடைக்கும். நாட்டில் உள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட ஜியோ பயனர்களுக்கு மூடுபனி பகுதிகள், விபத்து அதிகம் நடக்கும் இடங்கள், விலங்குகள் திரியும் பகுதிகள், திருப்பங்கள் போன்ற தகவல்கள் முன்கூட்டியே SMS, WhatsApp மூலம் தெரிவிக்கப்படும். தொடக்கத்தில் இந்தமுறை, நெடுஞ்சாலைகளில் பைலட் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
விபத்துகள் குறைக்கப்படும்
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் சாலை விபத்துகளை குறைப்பது, பயண பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும். பயணிகள் இருக்கும் இடத்தையும் பயண திசையையும் கண்காணித்து, தேவையான எச்சரிக்கைகளை தானாக அனுப்பும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. NHAI வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு தரமான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான்.
பயணிகளுக்கு வரப்பிரசாதம்
இந்த எச்சரிக்கை அமைப்பு Rajmargyatra ஆப் மற்றும் 1033 ஹெல்ப்லைன் உடன் ஒருங்கிணைக்கப்படும். இதனால் பயணிகள் சாலையின் நிலைமை, அவசர உதவி, மற்றும் எச்சரிக்கைகளை ஒரே தளத்தில் பெற முடியும். இந்த சேவை நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தால், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்று NHAI கூறுகிறது.
-----