

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்கள் பற்றி தெரிவிச்ச கரப்பான்கள் என்ற வார்த்தையை நையாண்டி செய்யற விதமா உருவானது தான் சிஜேபி அப்படின்னு அழைக்கப்படுற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. சமூக ஊடக அமைப்பா அரசியல் கட்சியா இல்லாம செயல்படும் இதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரா அபிஜித் தீப்கே செயல்பட்டு கிட்டு வர்றாரு. முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவரு தான் இவர்.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள்
நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது கரப்பான் பூச்சி கட்சி. ஜந்தர் மந்தரில் திரண்ட இளைஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு, மழைக்கால கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்றத்தை நோக்கியும் பேரணி நடத்தினாங்க.
மத்திய அரசுக்கு தலைவலி, பொதுமக்களுக்கு பாதிப்பு
கரப்பான்களின் தீவிர போராட்டங்கள், மத்திய அரசுக்கு தலைவலியா அமைஞ்சது மட்டுமல்லாம, பொதுமக்களையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியது. மெட்ரோ நிலையங்கள் மூடல், போக்குவரத்து தடை, கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால், டெல்லிவாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிச்சாங்க. அப்போதே, சிஜேபி போராட்டங்களில் வெளிநாட்டு சக்திகளின் கை இருக்கிறதாவும், மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதறாவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டங்கள்
இந்தநிலையில எஸ்ஐஆர் விவகாரத்தை முன்வைத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகணும் அப்படின்னு இண்டியா கூட்டணி டெல்லியில பேரணி, போராட்டங்களை நடத்தியது.
ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு தடை
அவங்கள தொடர்ந்து கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டங்களை முன்னெடுத்தது. இதன் காரணமா ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்த தடை விதித்த டெல்லி காவல்துறை, வேறு மூன்று இடங்களில் போராட்டங்களை நடத்த பர்மிஷன் கொடுத்து இருக்கு.
சிஜேபி நிர்வாகிகள் கைது, நீதிமன்ற காவல்
ஆனால் அதை ஏற்க மறுத்த சிஜேபி முன்னணி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி உள்ளே நுழைய முயற்சி செஞ்சாங்க. அவங்களை போலீசார் கைது செய்த நிலையில, 5 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்காங்க.
போராட்டங்களில் வெளிநாட்டு சக்திகள்
சிஜேபியினர் நடத்தும் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள், மோடி அரசுக்கு எதிரான சதி இருக்கிறதா ஏற்கனவே பேச்சு அடிபடுது. பாஜக தலைவர்களும் இது தொடர்பா, தங்களோட சந்தேகங்களை முன்வச்சு பேசி வர்றாங்க.
அம்பலப்படுத்திய அமெரிக்க பாடகி மேரி மில்பென்
இந்த சூழல்ல அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான மேரி மில்பென் பின்னணி சதியை உறுதிப்படுத்தி இருக்காரு.
ஊடக ஆளுமை மேரி மில்பென்
இவர் வெறும் மேடை பாடகி மட்டும் கிடையாது. நடிகை, ஊடக ஆளுமை அப்படின்னு பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்காவின் தேசிய கீதம் மற்றும் தேசபக்தி பாடல்களை சர்வதேச மேடைகளில் பாடியதால உலக அளவில இவருக்கு ரசிகர்கள் இருக்காங்க.
சிஜேபிக்கு அமெரிக்காவில் இருந்து நிதி
பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடை வழங்கப்படுவதாக அவர் தெரிவிச்சு இருக்காரு.
குறிவைக்கப்படும் உலக நாடுகள்
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ அமெரிக்காவை தளமாகக் கொண்ட நன்கொடையாளர்கள், சில நாடுகள தங்களோட இலக்கா நிர்ணயிச்சு செயல்பட்டுக்கிட்டு வர்றாங்க.
குழப்பத்தை ஏற்படுத்த நிதியுதவி
அந்த நாடுகளில் குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த, சில நடைமுறைகளை அவர் பின்பற்றி வர்றாங்க. முதலில் பழமைவாத உலகத் தலைவர்களை குறிவைப்பாங்க.
இதற்காக அந்த நாட்டில இருந்து, அமெரிக்காவிற்கு வந்து படிச்ச ஒருவரை தேர்வு செய்து அவரை முன்னிறுத்து தங்களோட இலக்கை தீவிரப்படுத்துவாங்க.
அந்தநபரை அவரோட சொந்த நாட்டிற்கு அனுப்பி குழப்பத்தையும், குளறுபடிகளையும் ஏற்படுத்த நன்கொடை என்கிற பெயரில நிதி கொடுப்பாங்க.
நிர்வாகம் பாதிப்பு, மக்கள் அவதி
இதுபோன்ற சதித் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வி அடைஞ்சு தான் இருக்கு. இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம், மக்களோட அன்றாட வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்திய இளைஞர்கள் குரல் கொடுக்கணும்
இந்தியாவில் ஆட்சியை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க இந்தியர்கள் குரல் கொடுக்கணும். இளம் தேசபக்தர்கள் இதை எழுச்சியோடு முன்னெடுக்கணும்.
தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும்
இந்திய மண்ணில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்றவங்க நாட்டுக்காக குரலை உயர்த்த வேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து, சிஜேபியின் சீர்குலைப்பு முயற்சிகளை முறியடிக்க அமைதியான முறையில் போராட வேண்டும்.
இளைஞர்களுக்கு மேரி மில்பென் அறிவுரை
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எப்போதும் ஒரு எதிர் இயக்கம் விழிப்பா இருக்க வேண்டும், அப்படின்னும் பாடகி மேரி மில்பென் அறிவுறுத்தி இருக்காங்க.
இந்த குற்றச்சாட்டை மத்திய பாஜக அரசு மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, கரப்பான்களுக்கு எங்கிருந்து நன்கொடை என்ற பெயரில் நிதி வருது, கொடுக்கிறவங்களோட உள்நோக்கம் என்ன? இது இந்தியாவில எப்படிப்பட்ட நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தி, மக்களை குழப்புது அப்படிங்கறத விசாரிக்க கடும் நடவடிக்கை எடுக்கணும் அப்படிங்கறது தான் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பா இருக்குது.
========================