

ரெப்போ வட்டி விகிதம்
Good News for borrowers as RBI cuts repo rate by 25 bps to 5.25% வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம், என்று அழைக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும். அதன்படி அறிவிப்புகள் வெளியிடப்படும்.
0.25% வட்டி குறைப்பு
அந்த வகையில், ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் மும்பையில் இரண்டு தினங்களாக நடைபெற்றது.
இதில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம், பணவீக்க விகிதம் , பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
ரிசர்வ் வங்கி பரிசு
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா இன்று வெளியிட்டார். அப்போது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக கூறினார். அதன்படி 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது .
வங்கிக் கடன் வட்டி குறையும்
ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி
எனவே வீட்டு கடன், வாகன கடன், தங்க நகை கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டி விகிதம் குறைய போகிறது. அதாவது மாதம் தோறும் செலுத்த கூடிய ஈஎம்ஐ குறைய போகிறத
மாதாந்திர ஈஎம்ஐ குறையும்
உதாரணமாக 50 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கிய நபர் 20 ஆண்டுகள் கடன் செலுத்தும் காலம் என்றால் 8.50% வட்டியில் மாதம் 43,391 ரூபாயை ஈஎம்ஐ-ஆக செலுத்துவார். வட்டி குறைந்து 8.25% என மாறினால், மாதாந்திர ஈஎம்ஐ தொகை 42,603 ரூபாயாக குறையும்.
வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மாதாந்திர ஈஎம்ஐ குறைப்பு அல்லது ஒட்டு மொத்த கடன் செலுத்தும் காலத்தை குறைப்பது என இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். பொதுவாக மாதாந்திர ஈஎம்ஐ தொகையை குறைக்காமல் கடன் செலுத்தும் காலத்தை குறைக்க வேண்டும் என்று தான் நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இது பெரிய அளவில் வட்டியில் சேமிப்பை கொடுக்கும் என்பது அவர்களின் அறிவுறுத்தல்.
இந்த ஆண்டு 1.25% வட்டி குறைப்பு
இந்த ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி இதுவரை 1.25% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் வட்டியை குறைக்காமல் வைத்தது. தற்போது 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
========