

"Return to the Homeland!" - Sridhar Vembu's Heartfelt Appeal to Indian-Americans:
ஸ்ரீதர்வேம்பு எக்ஸ்தளப் பதிவு
இந்தியத் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்து வரும் சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குத் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தாயகம் திரும்புங்கள் - ஸ்ரீதர்வேம்பு வேண்டுகோள்
அக்கடிதத்தில் அவர் பாரத நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களைச் சரியான பாதையில் வழிநடத்தவும் உங்களின் அனுபவம் மிக்கத் திறமை தாயகத்திற்குத் தேவை.
அதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களே தாயகம் திரும்புங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள்
தற்போது அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழலில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கை முடிவுகள் அந்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தியர்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்
குறிப்பாக, ஹெச்-1பி விசா முறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
தாயகம் திரும்புவதே சரியான முடிவாக இருக்கும்
இந்தியர்கள் தங்களின் கடின உழைப்பால் அமெரிக்காவில் மகத்தான வெற்றியை அடைந்திருந்தாலும், இன்றைய சூழலில் தாயகம் திரும்புவதே சரியான முடிவாக இருக்கும் என ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் செழிப்புக்குத் தொழில்நுட்பமே அடிப்படை
ஒரு நாட்டின் மரியாதை, செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் அந்த நாட்டின் தொழில்நுட்பத் திறனைப் பொறுத்தே அமைகின்றன.
வருந்தத்தக்க வகையில், இந்தியா உருவாக்கும் அறிவுத்திறனின் பெரும் பகுதி தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நம் நாட்டின் பலம் தன்னிறைவு பெறும்
இந்தியாவிலேயே அந்தத் திறமையை நாம் வளர்க்கும்போது, நமது நாட்டின் மக்கள் பலம் தன்னிறைவு பெறும்.
பல ஆண்டுகளாகப் வெளிநாட்டில் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை, நமது இந்திய இளைஞர் சமுதாயத்தைச் செழிப்பின் பாதையில் வழிநடத்தப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
=====