போர் எதிரொலி : விமான கட்டணங்கள் உயர்வு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, விமான எரி பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால்,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளுக்கான விமான கட்டணமானது உயர்ந்துள்ளது .
விலையை உயர்த்திய விமானங்கள்
போர் எதிரொலியால் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்த்துள்ளதன் விளைவாக , ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், பயணிகளுக்கான விமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2 வது முறையாக கட்டண உயர்வு
கடந்த மார்ச் 12-ம் தேதி விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக கட்டண உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள் - அமைச்சகம் உத்தரவு
சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், உள்நாட்டு விமான கட்டணங்களை 25 சதவீதத்துக்கு மேல் உயர்த்த கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, தற்போது உள்நாட்டு விமான பயணங்களுக்கு கட்டண உயர்வு ரூ.299 முதல், ரூ.899 வரை அதிகரித்துள்ளது.
விமான கட்டண விலை நிர்ணயம்
அதன்படி, முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.299, 501-ல் இருந்து 1,000 கிலோ மீட்டர் வரை ரூ.399, 1,001 முதல் 1,500 கிலோ மீட்டர் வரை ரூ.549, 1,501 முதல் 2,000 கிலோ மீட்டர் வரை ரூ.749, 2,000 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.899 என கட்டணம் நிர்ணயம் செய்து விலையை உயர்ந்துள்ளது.
முன்பதிவு செய்திருந்தாலும் இது பொருந்தாது
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்க, முன்னதாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு, இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
அவர்கள் பழைய கட்டண டிக்கெட்களில் பயணிக்கலாம். ஆனால் பயண தேதி, அல்லது பயணம் செய்யும் முறைகளில் மாற்றங்களை மேற்கொண்டால் , புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.