ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை இனி ஏடிஎம்மில் பெற்றுக் கொள்ளலாம் : அரசு முக்கிய அப்டேட்!

ATM Cash Withdrawal Of Small Currency Notes : டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து இருந்தாலும் சில்லறை தட்டுப்பாட்டை போக்க அரசு புதிய முயற்சியை எடுத்திருப்பாதக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Rs.10, Rs. 20, Rs. 50 small currency notes can now be obtained at ATMs: Central Government important update in Tamil
Rs.10, Rs. 20, Rs. 50 small currency notes can now be obtained at ATMs: Central Government important update in Tamilgoogle
1 min read

ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகள் இனி ஏடிஎம்மில்

ATM Cash Withdrawal Of Small Currency Notes : யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும் சில்லறை தட்டுப்பாடானது பெரிதளவில் இருந்து வருகிறது ,இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது , இனி ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளையும் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

இதனை நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி தகவல் தெரிவித்தார்.

ஏடிஎம் மூலம் புதிய பணம் எடுக்கும் முறை

ஏடிஎம்-களில் சிறிய நோட்டுகள் இதுநாள் வரை பெற முடியாத நிலைய இருந்து வந்தது .இதறகு பதிலளித்த அமைச்சர், பாரம்பரிய ஏடிஎம் இயந்திரங்களில் பொதுவாக சிறிய மதிப்புள்ள நோட்டுகள் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் தற்போது “Small Value Dispenser” என்ற புதிய முயற்சியின் மூலம், சிறிய மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் சிறப்பு ATM இயந்திரங்கள் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்களுக்கு சில்லறை பிரச்சனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிறிய மதிப்புள்ள நோட்டுகள்: போதுமான அளவு உள்ளது

சிறிய மதிப்புள்ள நோட்டுகள் சந்தையில் போதுமான அளவில் உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக 2025–26 நிதியாண்டில் பிப்ரவரி 26 வரை, சுமார் ரூ.10 நோட்டுகள் 439.40 கோடி, ரூ.20 நோட்டுகள் 193.70 கோடி, மற்றும் ரூ.50 நோட்டுகள் 130.30 கோடி அளவில் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது .

ஆர்பிஐ தொடர்ந்து செயலாற்றி வருகிறது

மேலும், நாட்டின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு ஆர்பிஐ பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளின் தேவையை தொடர்ந்து மதிப்பீடு செய்து அச்சிடுகிறது என்று அமைச்சர் கூறினார். சில்லறை தேவையை நோட்டுகள் மட்டுமல்லாமல் நாணயங்களின் மூலம்வும் பூர்த்தி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in