
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா :
RSS Chief Mohan Bhagwat on Operation Sindoor : 100 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளின் தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த வகையில், ஆர்எஸ்எஸ்-ன் 100வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நாக்பூரில் நடந்த விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சுயசார்பில் கவனம் செலுத்துக :
“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் இதன்மூலம் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகிறது. எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. இந்த சார்ந்திருத்தல் மாறக்கூடாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவை நோக்கும் உலக நாடுகள்
உலகளாவிய கவலைகளுக்கு தீர்வு காண உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது. இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக இருந்து உலகிற்கு ஒரு வழி காட்ட வேண்டும். வெளிநாட்டு சித்தாந்தங்கள் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம், அதை நாம் நம்முடையதாக கருதி ஏற்றுக் கொண்டோம். இதுவே இந்தியாவின் பன்முகத்தன்மை.
ஆபரேஷன் சிந்தூர் - இந்தியாவின் பெருமை
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்து வியந்தது. இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடந்த வன்முறை சம்பவம் கவலையளிக்கின்றன. மக்கள் நலனை புறக்கணித்தால் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அண்டை நாடுகளில் நடந்ததை போன்ற இடையூறுகளை உருவாக்க விரும்பும் சக்திகள் நமது நாட்டின் உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க : RSS Centenary Stamp: அஞ்சல் தலை வெளியீடு! : பிரதமர் மோடி பெருமிதம்
இளைஞர்களின் தேசிய உணர்வு
தேசிய உணர்வு, கலாசாரத்தின் மீதான நம்பிக்கை தற்போதைய இளைய தலைமுறையினரிடையே அதிகம் காணப்படுகிறது. தனி நபர்கள், சமூக சேவை நிறுவனங்கள் சமூகத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்காக சுயநலமின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர்” இவ்வாறு மோகன் பாகவத்(Mohan Bhagwat in RSS Centenary) உரையாற்றினார்.
===============